ராஜஸ்தானில் சாலை அமைக்கும் பணியில் மின்சாரம் தாக்கி 8 பேர் பலி

நமது நிருபர்




ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள சப்போலி கிராமத்தில் சாலை கட்டுமான பணி நடந்து வந்தது. தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்த போது மின்சாரம் தாக்கி உள்ளது. 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தொழிலாளர்கள் 3 பேர் காயம் அடைந்தனர்.

இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சரளை கற்களை கலக்கப் பயன்படுத்தப்பட்ட இயந்திரம் ஒன்று மின்சார கம்பியில் உரசி விபத்து நிகழ்ந்து உள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ராஜஸ்தான் முதல்வர் உத்தரவிட்டார்.

Advertisement