தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற்கு மன்னிப்பு கோரினார் பாலிவுட் நடிகர் இம்ரான் கான்
மும்பை:
பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் உறவினர் இம்ரான்கான். இவர் இந்தியாவில் பிறந்தவர், ஆனால் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். மத்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மும்பையில் நடைபெற்ற போராட்டத்தில் இம்ரான்கான் கலந்து கொண்டார். அமெரிக்க குடியுரிமை பெற்ற ஒருவர் இந்தியாவுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்றதால் அவரை நாட்டை விட்டு வெளியேற வெளிநாட்டு பதிவு அலுவலகம்(FRR0) நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து இம்ரான் கான் தரப்பில் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த ஐகோர்ட், நாட்டை விட்டு வெளியேற பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, '' இதேபோன்ற செயலில் இந்தியர் ஒருவர் வெளிநாட்டில் ஈடுபட்டால், அடுத்த விமானத்தில் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார். நீங்கள் பல ஆண்டுகளாக இந்தியாவில் தங்கிஉள்ளீர்கள். அப்போது எல்லாம் போராட்டத்தில் பங்கேற்காத நீங்கள் தற்போது பங்கேற்க வேண்டிய அவசியம் என்ன? நீங்கள் அமெரிக்காவுக்கு செல்லலாம். போராடலாம். ஓட்டுப் போடலாம். ஆனால், இங்கு போராட்டம் நடத்துவதை சகித்து கொள்ள முடியாது'' என ஐகோர்ட் கூறியது.
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ,'' வெளிநாட்டு குடியுரிமை வைத்துள்ள இம்ரான் கான், சலுகையும் உரிமையும் குறிப்பிடத்தக்க அளவு மட்டுமே உள்ளது. இந்தியர்களுக்கு உள்ள உரிமையை காட்டிலும் வேறுபட்டது,'' என்றார்.
இம்ரான் கான் தரப்பில் '' இரண்டு ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்ததை தவிர மற்ற நாட்களில் இந்தியாவில் தான் உள்ளேன். எனது குடும்பம், தொழில், பாரம்பரியம் இந்தியாவை சேர்ந்தது,'' என்றார்.
மும்பை ஐகோர்ட்,'' வெளிநாட்டு குடியுரிமை வைத்துள்ளவர்கள், நாட்டின் கருணையை சார்ந்துள்ளனர். இந்தியர்களுக்கு உள்ள அதே உரிமைகளை அவர்களால் கோர முடியாது. எதிர்காலங்களில் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க மாட்டேன், என உறுதிமொழி அளிக்க வேண்டும்,'' என உத்தரவிட்டு, இடைக்கால தடையை டிசம்பர்7 ம் தேதி வரை நீட்டித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.
ஐகோர்ட்டின் உத்தரவை ஏற்று போராட்டத்தில் பங்கேற்றதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு இம்ரான் கான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
பணமும் அதிகாரமும் உள்ளவர்கள் தவறு செய்து மன்னிப்பு மட்டும் கேட்டால் போதுமானது.
ஆனால் சாமான்ய மக்கள் தவறு செய்தால் சிறை தண்டனை. வாழ்க சனநாயகம்
சில வருடங்களுக்கு முன் இந்தியாவில் இருப்பதற்கு பயம் ஆக இருக்கிறது என்று பேட்டி கொடுத்தவர்
இது கேவலமான முன் உதாரணம் ஆகி விடும். இஸ்லாமியர்கள் என்றால் ஹை கோர்ட் ஜட்ஜ்களுக்கு பாசம் அதிகம் போல. என்ன தவறு செய்தாலும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு விடுகிறார்கள். கேவலமா இருக்கு.
மன்னிப்புக்கேட்டால் குற்றங்கள் மன்னிக்கப்படுமா ??
இது உயர்நீதிமன்றத்தின் முட்டாள்தனம். இந்த நாயை எதுக்கு இந்தியாவில் வைத்திருக்கணும்? நாடு கடத்த வேண்டியது தானே. இவன் இங்க குண்டு வச்சா நீதிமன்றங்கள் என்ன செய்யும்? அப்பவும் இப்படித்தான் பக்குவமா விசாரணை செய்யுமா?
இது போன்ற துரோகிகளுக்கு கருணை காட்டுவது மிகத்தவறு. எந்த ஒரு இந்தியக்குடிமகனாவது, பாகிஸ்தானிலோ, ஏன் ஏதோ ஒரு இஸ்லாமிய நாட்டிலோ போய் அந்த நாட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போராட்டம் செய்தால், "மெக்காவில் பொதுவெளியில் முத்தமிட்ட" தம்பதிகளுக்கு நேர்ந்த கதிதான்.
பாலிவுட் நடிகர்களை மன்னித்து விட்டுவிடுவார்கள்.
கண்டிப்பாக ஏற்க உடாது. வெளிநாட்ஸர் அரசியலிலோ, போராட்டங்களிவோ பங்கேற்க பங்கேற்ஙகூடாது என்று தெரியாதா?
என்ன மன்னிப்பு கேட்டாலும் நாட்டுக்குள் விடாதீர்கள்... இவைகள் எல்லாம் பின்னாளில் இந்தியாவை துண்டாட நிதி உதவிகள் செய்யும்.. எனவே இந்தியாவை விட்டு அடித்து விரட்ட வேண்டும்...
மன்னிக்க கூடாது, பப்பு கூடத்தான் பல முறை மன்னிப்பு கேட்டு விட்டு மீண்டும் மீண்டும் வாய்சவடால் விடுகிறார். உடனடியாக நாடு கடத்த வேண்டும். மீண்டும் இந்தியாவிற்குள் அனுமதிக்க கூடாது.மேலும்
-
தீபாவளி நேரத்தில் அதிரடி ஆய்வு: மஹாராஷ்டிராவில் ரூ.9 கோடி உணவுப் பொருட்கள் பறிமுதல்
-
நேபாள ஹெலிகாப்டர் விபத்தில் தமிழர் உயிரிழப்பு
-
புயலுக்கு முரசு என்ற தமிழ்ப் பெயர் சூட்டியது எப்படி? சுவாரஸ்ய தகவல் இதோ!
-
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கல்; சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்
-
மேற்காசியாவில் மீண்டும் பதற்றம்; ஈரான் மீது அமெரிக்காவின் ரகசியத் தாக்குதல்
-
புயலால் 2வது நாளாக இன்றும் பாதிப்பு; சென்னை-ஆந்திரா செல்லும் 4 விமானங்கள் ரத்து