கட்டுமான தொழிலாளர்களுக்கு போனஸ்: மாவட்ட கலெக்டரிடம் மனு
ஊட்டி:கட்டுமான தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க கோரி சங்கம் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் பேரவை மாவட்ட செயலாளர் ரமேஷ் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:
கட்டுமான, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஒரு நிரந்தரமான முதலாளியோ அல்லது நிரந்தரமான ஊதியமோ இல்லாத நிலையிலும் உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுக்கப்படுவதில்லை.
வறுமை கோட்டுக்கு கீழ், வாழ்ந்து வரும் குடும்பங்களின் சமூக பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்திடும் பொறுப்பு மாநில அரசுக்கு இருக்கின்ற காரணத்தினாலும் , பாண்டிசேரி மற்றும் டில்லி போன்ற மாநிலங்களில் நல வாரிய உறுப்பினர்களின் குடும்பங்கள் மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகை கொண்டாட போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல, தமிழகத்தில் உள்ள கட்டுமான, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனசாக, 7,000 ரூபாய் வழங்கிட தாங்கள் ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
வாலிபர் சரமாரியாக வெட்டி படுகொலை
-
தீபாவளி மாமூல் வாங்குவதில் மோதல் துணிக்கடையில் தள்ளுமுள்ளு: இரு போலீசார் அதிரடி இடமாற்றம்
-
மொபைல் போனை உடைத்ததால் தந்தையை கொன்ற மகள்
-
புதுகையில் புதிய பஸ் ஸ்டாண்ட் முதல்வர் விஜய் திறப்பு
-
போதைப்பொருளை வைத்து சிவசேனா நிர்வாகியை சிக்க வைத்த போலீஸ்: ரகசிய கேமராவில் பதிவானதால் சர்ச்சை
-
ரூ.4.75 கோடி ஜி.எஸ்.டி.,; பெண் தொழிலாளி 'ஷாக்'