பாலங்களில் ஓட்டையை குப்பையால் மறைத்த நகராட்சி
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பயணியர் விடுதி ரோட்டில் உள்ள பாலங்களில் ஏற்பட்ட ஓட்டைகளை சரிசெய்ய முயற்சிக்காமல் நகராட்சி நிர்வாகம் குப்பையால் அடைத்து வைத்துள்ளது.உசிலம்பட்டி பயணியர் விடுதி வழியாக கவண்டன்பட்டி, விளாம்பட்டி மலைப்பட்டி செல்லும் ரோடு உள்ளது. பள்ளிகள், டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் அலுவலகங்கள், கோர்ட், நெடுஞ்சாலைத்துறை என பல அரசு அலுவலகங்களுக்கும் இதுதான் பிரதான ரோடு.
இந்த ரோட்டில் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பிருந்து திரும்பும் இடத்தில் ரோட்டின் குறுக்கே அமைத்த கழிவுநீர் கால்வாய் பாலத்தில் கான்கிரீட் பெயர்ந்து ஓட்டை விழுந்துள்ளது. இதே போல டி.எஸ்.பி., அலுவலகம் முன்புள்ள கழிவுநீர் கால்வாய் பாலத்திலும் ஓட்டை உள்ளது.
இவற்றை முறையாக சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக கற்கள், குப்பையை போட்டு அடைத்து வைத்துள்ளனர். இதில் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதற்குள் பாலத்தின் ஓட்டைகளை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
நேபாள ஹெலிகாப்டர் விபத்தில் தமிழர் உயிரிழப்பு
-
புயலுக்கு முரசு என்ற தமிழ்ப் பெயர் சூட்டியது எப்படி? சுவாரஸ்ய தகவல் இதோ!
-
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கல்; சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்
-
மேற்காசியாவில் மீண்டும் பதற்றம்; ஈரான் மீது அமெரிக்காவின் ரகசியத் தாக்குதல்
-
புயலால் 2வது நாளாக இன்றும் பாதிப்பு; சென்னை-ஆந்திரா செல்லும் 4 விமானங்கள் ரத்து
-
இன்றும் உயர்ந்தது தங்கம் விலை; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.560 உயர்வு