விவசாயிகளுக்கு தீபாவளி பரிசு வழங்கிய அமைச்சர்

திருச்சி: திருச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான ரமேஷ் தலைமையில், விவசாயிகளுக்கு தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அமைச்சர் ரமேஷ் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள், பட்டாசுகள் அடங்கிய தீபாவளி பரிசு பொருட்களை வழங்கினார்.

தொடர்ந்து, விவசாயிகளுடனும் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். அப்போது அமைச்சருக்கு விவசாயிகள் இனிப்பு ஊட்டினர். அமைச்சரும் விவசாயிகளுக்கு உணவை ஊட்டி விட்டார்.

அதன் பின், அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நாம் ஒவ்வொரு வேளை உண்ணும் உணவில் விவசாயிகளின் உழைப்பு நிறைந்து உள்ளது. தமிழக முதல்வரும், நாங்களும் விவசாயிகளை பெற்றோராக கருதுகிறோம்.

பண்டிகை காலங்களில் பெற்றோருக்கு செய்வதைப் போல, அன்பின் வெளிப்பாடாக விவசாய பெருமக்களுக்கு புத்தாடையும் இனிப்பும் வழங்கப்பட்டது.

நமக்கு உணவளித்து உடலுக்கும், உயிருக்கும் ஆதாரமாக இருக்கும் விவசாயிகளுக்கு, என் கையால் உணவு பரிமாற வேண்டும் என்ற நோக்கில் மதிய உணவு உபசரிப்பு செய்யப்பட்டது.

தமிழகத்துக்கும், மக்களுக்கும் உழைக்கும் விவசாயிகளின் பேரன்பிற்கு என்றும் கைமாறு செய்ய முடியாது. விவசாயிகளை பெருமைப்படுத்தவும், வணங்கவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது, என்று தெரிவித்தார்.

Advertisement