புயல் பாதித்த ஏனாமில் மத்தியக் குழு ஆய்வு_ மத்திய அரசிடம் அறிக்கை அளிக்க முடிவு
புதுச்சேரி: அர்னாப் புயலால் ஏனாம் பிராந்தியத்தில் ஏற்பட்ட புயல் சேதங்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் சித்ரஞ்சன் தாஸ் தலைமையிலான மத்தியக் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அர்னாப் புயல் காரணமாக ஏனாம் பிராந்தியம் பெரும் பாதிப்புகளைச் சந்தித்த நிலையில், முதல் கட்ட இடைக்கால நிவாரணமாக ரூ.50 கோடி வழங்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியிருந்தார்.
உயர் மட்டக் குழு வருகை:
இதனைத் தொடர்ந்து, சேதங்களை மதிப்பீடு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் சித்ரஞ்சன் தாஸ் தலைமையில் 4 பேர் கொண்ட மத்தியக் குழுவினர் ஏனாமிற்கு நேற்று வருகை தந்தனர். இக்குழுவில் மத்திய வேளாண்மைத் துறை கூடுதல் ஆணையர் பிரசாந்த் அர்மோரிகர், மத்திய நிதித் துறை உதவி இயக்குநர் ஹிமாலயா கார்க், துணை இயக்குநர் பிரணய் கார்க் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடி ஆய்வு:
மத்தியக் குழுவினர் . ஏனாம் முதியோர் இல்லம் அருகே உள்ள பகுதியில் புயலால் சேதமடைந்த வீடுகளைப் பார்வையிட்டனர்.பரம்பேட்டா பிரதான சாலையில் சாய்ந்த மின்கம்பங்களை ஆய்வு செய்தனர். தரியாலதிப்பா பகுதியில் பாதித்த நெற்பயிர்கள் மற்றும் தென்னை மரங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்தனர். மேலும், குடியிருப்புகள், மீன்வளம் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு ஏற்பட்ட சேதங்களையும் ஆய்வு செய்தனர்.
மத்திய அரசிடம் அறிக்கை:
ஏனாமில் ஏற்பட்ட பாதிப்புகளின் தீவிரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட இந்த நேரடி ஆய்வின் அடிப்படையில், மத்தியக் குழுவினர் விரைவில் மத்திய அரசிடம் முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்க உள்ளனர். இந்த ஆய்வின் மூலம் ஏனாம் பிராந்தியத்திற்குத் தேவையான நிவாரண உதவிகள் மற்றும் புனரமைப்பு நிதிகள் விரைவாகக் கிடைக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆய்வின் போது கலெக்டர் குலோத்துங்கன், அரசு செயலாளர் அனூப் தாகூர், பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில், வேளாண்துறை இயக்குனர் ஜெய்சங்கர் உடனிருந்தனர்.
@block_B@அதிகாரிகளுடன் ஆலோசனை:
ஆய்வுக்கு முன்னதாக, ஏனாம் பிராந்திய நிர்வாக அதிகாரி அலுவலகக் கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், பிராந்திய நிர்வாக அதிகாரி சிவராஜ் மீனா புயல் பாதிப்புகள் குறித்து விளக்கினார். பவர் பாயிண்ட் விளக்கக்காட்சி மூலம் விவசாயம், மீன்வளம், மின்சாரம், சாலைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு ஏற்பட்ட சேத விவரங்களை மத்திய குழுவினரிடம் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.block_B
மேலும்
-
வாலிபர் சரமாரியாக வெட்டி படுகொலை
-
தீபாவளி மாமூல் வாங்குவதில் மோதல் துணிக்கடையில் தள்ளுமுள்ளு: இரு போலீசார் அதிரடி இடமாற்றம்
-
மொபைல் போனை உடைத்ததால் தந்தையை கொன்ற மகள்
-
புதுகையில் புதிய பஸ் ஸ்டாண்ட் முதல்வர் விஜய் திறப்பு
-
போதைப்பொருளை வைத்து சிவசேனா நிர்வாகியை சிக்க வைத்த போலீஸ்: ரகசிய கேமராவில் பதிவானதால் சர்ச்சை
-
ரூ.4.75 கோடி ஜி.எஸ்.டி.,; பெண் தொழிலாளி 'ஷாக்'