பார்லிமென்டில் விவாதங்களில் பங்கேற்க மறுக்கும் காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன்
- சிறப்பு நிருபர்-
மும்பை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ஒரு கட்டத்திற்கு பிறகு தொடர விரும்பாத பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எடுப்பது துரதிர்ஷ்டம்..100 எம்பிக்கள் கொண்ட எதிர்க்கட்சி உள்ளது. அக்கட்சி பார்லிமென்டில் விவாதத்தில் பங்கேற்காது. பார்லிமென்டில் அக்கட்சி குரல் எழுப்புகிறது. அதற்கு பதிலளிக்க முயன்றால் வெளிநடப்பு செய்கிறது. ஓட்டெடுப்பின் போது அக்கட்சி இல்லை. அரசு தரப்பு பதிலளிக்க முயலும் போது தடுக்கிறது.
வெளியில் மாதிரி பார்லிமென்ட்டை நடத்தி என்ன பயன்? நான் மாதிரி பார்லிமென்ட்டை மதிக்கிறேன். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு பார்லிமென்ட் விவகாரங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால், எதிர்க்கட்சிகள் மாதிரி பார்லிமென்ட் நடத்தி விளையாடுகிறார்கள். பார்லிமென்டில் பொறுப்புடன் செயல்பட இந்திய மக்கள் தேர்வு செய்த 100 எம்பிக்கள் கொண்ட கட்சியாக காங்கிரஸ் உள்ளது. ஆனால்,பார்லிமென்ட்டை கேலி செய்கிறது. ஆட்சி மாற்றம் ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும். இது ஓட்டளிக்கும் செயல்முறை மற்றும் தேர்தல் செயல்முறை வாயிலாக நடக்கிறது. நீங்கள் தேர்தல் நடைமுறைகளை நம்பாமல் தெருக்களில் இருக்க விரும்புகிறீர்கள். பிரதமர் மோடியை விமர்சிக்கிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
இந்திய பொருளாதாரம் சிறப்பாக செயல்படுகிறது
மும்பையில் நடந்த கலந்துரையாடலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: வறுமை ஒழிப்பு தொடர்பாக, உலக வங்கியின் அறிக்கையை 10 நாட்களாக மக்கள் விவாதிக்கின்றனர். அடிப்படை சுகாதாரம், நிதி உள்ளடக்கம் உள்ளிட்ட பல வசதிகளை அணுகும் வாய்ப்பை மக்களுக்கு வழங்கினோம். தொடர்ச்சியான முயற்சியால் வறுமை விரைவாக குறைந்தது. 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் பலன்களைப் பொறுத்தவரை, இதில் 5 லட்சம் ரூபாய் வரையிலான பணமில்லா மருத்துவ சிகிச்சை வசதி வழங்கப்படுகிறது.
மக்களின் விருப்பங்களும், முன்னேற அவர்கள் எடுக்கும் முயற்சிகளும், எதிலும் பின்தங்கிவிடக்கூடாது என்ற அவர்களின் உறுதிப்பாடு மற்றும் மிகப்பெரிய உள்நாட்டு சந்தை ஆகியவை இந்திய பொருளாதாரம் துடிப்பாக இருப்பதற்கு மிக முக்கிய காரணிகளாகும்.
முன்பு சந்தையில் வாங்கும் திறன் பெரிய அளவில் இல்லை. இன்று நடுத்தர வர்க்கத்தினரின் வசதி உயர்கிறது. அவர்களின் வாங்கும் திறனும் அதிகரிக்கிறது. இதனால், அது உள்நாட்டு நுகர்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இவை அனைத்தும் ஒன்றிணைந்து இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது.
பிரதமர் மோடியின் மூன்றாவது பதவிக்காலம், நிலைத்தன்மையையும், வெளிப்படைத்தன்மையையும் கொண்டு வருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, கொள்கைகள் உருவாக்கப்படும் விதத்தில் தெளிவாக இருக்க வேண்டும் என்று வணிக நிறுவனங்கள் விரும்புகின்றன. இத்தகைய காரணிகள் வணிகங்களுக்கு நம்பிக்கையை அளிக்கின்றன. இதன் விளைவாக இந்திய பொருளாதாரம் சிறப்பாக செயல்படுகிறது.
வங்கித்துறை சீர்திருத்தம்
தொழில்துறையினருடன் ஆலோசித்து உயர் மட்ட குழுவை அமைத்துள்ளோம். '' வளர்ந்த பாரதத்திற்கு ல் இந்திய வங்கி அமைப்பில் என்ன தேவை'' என நிபுணர்கள் அறிக்கை அளிக்க உள்ளனர். 2013,2014,15ல் வங்கித்துறை சந்தித்த இடர்பாடுகள் தற்போது இல்லை. இருப்பினும் வளர்ந்த பாரதத்தில் சவால்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக செயல்படலாம். ஆனால் வொவொரு குடும்பத்தின் பொருள் ஆதாரம் மிகவும் மோசம். இன்று அரிசிவிலை ரூ. 100. ஏழைகள் அரிசி வாங்கி சாதம் சாப்பிடமுடியாத அளவுக்கு அவர்களின் பொருள் ஆதாரம் மிகவும் வீக். இந்த அவலத்தை சரிசெய்யுங்கள் இந்திய நிதி அமைச்சரே. நன்றி.மேலும்
-
வாலிபர் சரமாரியாக வெட்டி படுகொலை
-
தீபாவளி மாமூல் வாங்குவதில் மோதல் துணிக்கடையில் தள்ளுமுள்ளு: இரு போலீசார் அதிரடி இடமாற்றம்
-
மொபைல் போனை உடைத்ததால் தந்தையை கொன்ற மகள்
-
புதுகையில் புதிய பஸ் ஸ்டாண்ட் முதல்வர் விஜய் திறப்பு
-
போதைப்பொருளை வைத்து சிவசேனா நிர்வாகியை சிக்க வைத்த போலீஸ்: ரகசிய கேமராவில் பதிவானதால் சர்ச்சை
-
ரூ.4.75 கோடி ஜி.எஸ்.டி.,; பெண் தொழிலாளி 'ஷாக்'