தேனி டூ சென்னைக்கு 40 சிறப்பு பஸ்கள் இயக்கம்
தேனி: தேனியில் இருந்து சென்னைக்கு 40 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீபாவளி பண்டிகை: ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெளியூர்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு வந்து பண்டிகையை கொண்டாடிவிட்டு மீண்டும் திரும்பும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
தேனி மாவட்டத்தில் தேனி, குமுளி, கம்பம் பகுதிகளில் இருந்து பிற நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி தேனியில் இருந்து சென்னைக்கு 40 பஸ்கள், கோவைக்கு 30 பஸ்கள், மதுரைக்கு 10 பஸ்கள், திருப்பூருக்கு 10 பஸ்கள் என மொத்தம் 90 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ்கள் நவ. 5 முதல் நவ. 9 வரை இயக்கப்பட உள்ளன.
தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், குறிப்பிட்ட இடைவெளியில் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் வருகையை கருத்தில் கொண்டு தேவைக்கு ஏற்ப கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர வெற்றி பயண திட்ட பஸ்கள் மற்றும் சாதாரண பஸ்கள் வழக்கமான வழித்தடங்களில் தொடர்ந்து இயக்கப்படும் என திண்டுக்கல் மண்டல போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்
-
உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்க சிஐஎஸ்எப் எடுத்த முடிவு
-
தீபாவளி நேரத்தில் அதிரடி ஆய்வு: மஹாராஷ்டிராவில் ரூ.9 கோடி உணவுப் பொருட்கள் பறிமுதல்
-
நேபாள ஹெலிகாப்டர் விபத்தில் தமிழர் உயிரிழப்பு
-
புயலுக்கு முரசு என்ற தமிழ்ப் பெயர் சூட்டியது எப்படி? சுவாரஸ்ய தகவல் இதோ!