கம்யூ.,சார்பில் ஆர்ப்பாட்டம்

கோவை: அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரிசி, பருப்பு, கடுகு, சீரகம், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்தாத, தமிழக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை மாநகரில் காந்திபுரம், சிங்காநல்லூர், பீளமேடு பாரதிநகர், சுந்தராபுரம் பகுதிகளிலும், புறநகரில் மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், பச்சாபாளையம், அன்னூர் உள்பட மாவட்டத்தில் 11 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement