பெண்ணை கத்தியால் வெட்டிய நபர் கைது
அரியாங்குப்பம்: முன்விரோதம் காரணமாக பெண்ணை கத்தியால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம் பி.சி.பி., நகரை சேர்ந்தவர் விமல்சுந்தர்,41; இவரும், புதுச்சேரி கோரிமேடு பகுதியை சேர்ந்த சர்மிளா,45; என்பவரும் உறவினர்கள். இவர்களுக்கிடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில், சர்மிளா முருங்கப்பாக்கம் கோவிலுக்கு சென்று விட்டு, வீட்டுக்கு சென்ற போது, விமல்சுந்தர் அவரிடம் தகராறு செய்து, அவரது மொபைலை பறித்து சென்றார். சர்மிளா அவரது வீட்டுக்கு சென்று மொபைலை கேட்ட போது, இவர்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டது.
அதில், ஆத்திரமடைந்த, விமல்சுந்தர், கத்தியால் சர்மிளாவை வெட்டினார். இதில், காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில், சேர்த்தனர்.
சர்மிளா புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, விமல்சுந்தரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
படுக்கையானது ஓடுபாதை; விமான பயணியர் வெறுப்பு
-
விரக்தி!பயணியை தடுத்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை: கண்துடைப்பாக நடந்த பேச்சுவார்த்தையால் மக்கள்
-
தாலுகா அலுவலகத்திற்குள் ஆறாக ஓடும் காவிரி குடிநீர்
-
தேனி, கோவையில் இன்று இடி, மின்னலுடன் கனமழை
-
பழநி கோயிலில் ரோப்கார் சோதனை ஓட்டம்
-
மீட்டெடுக்கப்படுமா ... அழிவின் விளிம்பில் கொடைக்கானல் மலை ஆரஞ்சு : நோய் தாக்குதலால் சாகுபடி பரப்பும் குறைந்தது
Advertisement
Advertisement