மீட்டெடுக்கப்படுமா ... அழிவின் விளிம்பில் கொடைக்கானல் மலை ஆரஞ்சு : நோய் தாக்குதலால் சாகுபடி பரப்பும் குறைந்தது
கொடைக்கானல்:கொடைக்கானல் மலைப்பகுதியில் அழிவின் விளிம்பில் மலை ஆரஞ்சு விவசாயம் உள்ள நிலையில் அதிக மகசூல் தரும், நோய்
தாக்குதலற்ற ஆரஞ்சு நாற்றுகளை விவசாயிகளுக்குவழங்கி இவ்
விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டும்என கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், தாண்டிக்குடி கீழ்மலைப் பகுதியில் 1500 ஏக்கர் பரப்பில் காபிக்கு மத்தியில் ஊடுபயிராக மலை ஆரஞ்சு விவசாயம் நடக்கிறது. துவக்கத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கிய மலை ஆரஞ்சில் தற்போது நோய் தாக்குதலால் விவசாயப் பரப்பு சுருங்கியுள்ளது.
மலை ஆரஞ்சு ஆண்டிற்கு இருமுறை மகசூல் அளிக்கக்கூடியது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நாக்பூர் ஆரஞ்சு நாற்று நடவு செய்து ஏற்பட்ட பாதிப்பு, சீதோஷ்ண நிலை மாற்றம், சாம்பல் நோய், ஸ்கிரினிங் வைரஸ் தாக்குதல், சாறு உறிஞ்சும் பூச்சி, இலைத்துருநோய், மை நோய், வேர் அழுகல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் மரங்கள் காய்ந்தும், மகசூல் இழப்பும் ஏற்பட்டது.
ஆரஞ்சு விவசாயத்தை மீட்டெடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்த போதும் தோட்டக்கலைத்துறையினர் மெத்தனப்போக்கை கடைபிடித்தனர். மலை ஆரஞ்சு சாகுபடி பரப்பில் 90 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டு தற்போது 10 சதவீதமாக சரிந்துள்ளது.
விவசாயிகளின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்த மலை ஆரஞ்சு விவசாயத்தை மீண்டும் உயிர்பிக்க தோட்டக்கலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தற்போது ஏற்பட்டுள்ள சீதோஷ்ண நிலை மாற்றத்திற்கு ஏற்ற, நோய் தாக்குதலற்ற ஆரஞ்சு நாற்றுகளை விவசாயிகளுக்கு உற்பத்தி செய்து இதன் பரப்பை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
விவசாயிகளுக்கு மானிய விலையில் நாற்றுகள்தாண்டிக்குடி விவசாயி ரவிச்சந்திரன் கூறியதாவது: 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட காபிக்கு மத்தியில் ஊடுபயிராக மலை ஆரஞ்சு என அழைக்கப்படும் கமலா ஆரஞ்சு விவசாயம் செய்யப்பட்டு வந்தது. காலநிலை மாற்றம், நோய் தாக்குதலால் தற்போது அழிவின் விளிம்பிற்கு சென்றுள்ளது. தற்போது இங்குள்ள விவசாயிகளும் தங்களது தேவைக்காக விலைக்கு வாங்கும் நிலை உள்ளது.
தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தினர் நோய் பாதிப்பற்ற, அதிக மகசூல் தரக்கூடிய மலை ஆரஞ்சு வேர் செடிகளை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கி இதன் பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தரமான நாற்றுகள் வழங்க நடவடிக்கை
தடியன்குடிசை, தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய தலைவர் முத்துராமலிங்கம் கூறியதாவது:
தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில், நாக்பூர் ஆரஞ்சு ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து நோய் தாக்குதலற்ற வேர் செடிகளை வாங்கி, அதில் மலை ஆரஞ்சு குச்சிகளை ஒட்டுக்கட்டி, அதிலிருந்து கூடுதல் மகசூல், நோய் எதிர்ப்பு சக்தி உள்ள நாற்றுகளை உற்பத்தி செய்து
வருகிறோம்.
இந்த ஆராய்ச்சி தற்போது முதற்கட்ட அளவில் உள்ளது. இது நிறைவு பெற்றவுடன் விவசாயிகளுக்கு தரமான ஆரஞ்சு நாற்றுகளை வழங்க ஆயத்தமாக உள்ளோம்.
ஆரஞ்சு விவசாயத்தில் பூ, பழங்கள் உருவாகும் தருணத்தில் தேவையான நுண்ணுாட்டச் சத்து உர மேலாண்மை, நோய் பாதிப்பை தவிர்க்கும் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து இவ்விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும்
-
விரக்தி!பயணியை தடுத்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை: கண்துடைப்பாக நடந்த பேச்சுவார்த்தையால் மக்கள்
-
தாலுகா அலுவலகத்திற்குள் ஆறாக ஓடும் காவிரி குடிநீர்
-
தேனி, கோவையில் இன்று இடி, மின்னலுடன் கனமழை
-
பழநி கோயிலில் ரோப்கார் சோதனை ஓட்டம்
-
மதுரை மாநகராட்சியில் குப்பை அகற்ற ரூ.270 கோடிக்கு டெண்டர் 81 வார்டுகளில் ஏற்பாடு
-
இண்டி கூட்டணி போராட்டத்தால் ரூ.14,000 கோடி இழப்பு: கமிஷனருக்கு கடிதம்