படுக்கையானது ஓடுபாதை; விமான பயணியர் வெறுப்பு
லண்டன் பெண் லாரா வலைதளங்களில் வைரல்
உத்தர பிரதேசத்தின் பாக்பத் மாவட்டம், பாவ்லி கிராமத்தில் ஆறு நாட்கள் தங்கிய பிரிட்டிஷ் பெண் லாரா பெய்ன், தன், 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் பகிர்ந்த வீடியோ வைரலாகியுள்ளது.
உள்ளூர் வீடுகளில் தங்கி, அவர்கள் சமைத்த உணவை உண்டு, கரும்புத் தோட்டத்தில் டிராக்டரும் ஓட்டினார் லாரா. அவரை, அந்த பகுதி மக்கள், லண்டன் பெண் என்ற பொருளில், 'லண்டன் கி லாலி' என அழைத்தனர். கயிற்றுக் கட்டிலில் ஓய்வெடுப்பது, நாயுடன் விளையாடுவது, அக்கம்பக்கத்து பெண்களுடன் நடனமாடுவது, கோவில்கள், சந்தைகளை சுற்றிப் பார்ப்பது என, பல மகிழ்ச்சி தருணங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
துவாரகை சென்றார்; நண்பரை வென்றார்
மஹாராஷ்டிராவின் மும்பை எஸ்.பி.ஐ., கிளை ஊழியரான உத்சவ் குமார் ஜா, தன் நண்பர் இதீஷ் குமார் ராயிடம், 'யார் முதலில் சார்தாம் யாத்திரையை முடிப்பது' என, பந்தயம் கட்டினார். இருவரும் மூன்று தலங்களை தரிசித்தனர்.
இதீஷுக்கு ராமேஸ்வரமும், உத்சவுக்கு துவாரகையும் மீதமிருந்தன. இன்று, இதீஷ் ராமேஸ்வரம் செல்லவிருப்பதை அறிந்த உத்சவ், ரயிலில் பிரீமியம் தத்கால் டிக்கெட் எடுத்து, நண்பருக்கு சொல்லாமல் துவாரகைக்கு புறப்பட்டார். வீட்டில் புறப்பட்டது முதல், துவாரகை கோவிலை அடையும் வரை, முழுமையான விரதம் இருந்தார்.
'மன்னிக்கவும் இதீஷ் பாய், நீ முதலில் முடித்துவிடுவாய் என்று நினைத்தாயா? இதோ துவாரகை கோவில்' என்று பேசி, வீடியோ வெளியிட்டார். சவாலில் வென்றதை சொல்லும் வீடியோ, இணையத்தில், 40 லட்சம் பார்வைகளை கடந்து வேகமாக பரவி வருகிறது.
படுக்கையானது ஓடுபாதை; விமான பயணியர் வெறுப்பு
கோரக்பூர்- - மும்பை ஸ்பைஸ்ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்ட விவகாரம், வலைதளங்களில் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. பல மணி நேர தாமதத்துக்கு பின், விமானத்தில் ஏற பயணியர் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், ஒரு மணி நேரமாகியும் விமானம் கிளம்பவில்லை.
கடைசியில், 'விமானம் ரத்து செய்யப்படுகிறது' என, கூறி விட்டனர். கொந்தளித்த பயணியர், ஓடு பாதையில் விமானத்தின் அருகே அமர்ந்தும், படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடிகை விஜயலஷ்மி, இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோக்களை பகிர்ந்தார். 'வி மானத்தின் கீழ் இப்படி படுப்பேன் என, வாழ்க்கையில் நினைத்ததே இல்லை' என்கிறார், அவர்.
57 வயதில் 'அயர்ன்மேன்' ஐகோர்ட் நீதிபதி சாதனை
கோவாவில் நடந்த, 'அயர்ன்மேன்' சவாலை, கேரள உயர் நீதிமன்ற நீதிபதியான, 57 வயது பெச்சு குரியன் தாமஸ், 8 மணி 46 நிமிடம் 44 வினாடிகளில் முடித்தார். 1.9 கி.மீ., நீச்சல், 90 கி.மீ., சைக்கிள், 21.1 கி.மீ., ஓட்டம் என, மூன்றும் அடங்கியது இந்த அயர்ன்மேன் சவால். தன் மகன் பயிற்சி பெறுவதை பார்த்து உத்வேகம் பெற்ற தாமஸ், தானும் பயிற்சியில் ஈடுபட தொடங்கினார். பணி பாதிக்காத வகையில், துாங்கும் நேரத்தை குறைத்து பயிற்சி செய்தார்.
காயங்கள், தசைக்கிழிவுகள் வந்த போதும் நம்பிக்கை யுடன் தொடர்ந்தார். உணவில் மாற்றம் செய்து, 97 கிலோவிலிருந்து, 86 கிலோவாக குறைத்தவர், இப்போது அயர்ன்மேன் சவாலை வெற்றிகரமாக முடித்துள்ளார். 'அச்சம் முடியும் இடத்தில் வாழ்க்கை தொடங்குகிறது; மீண்டும் பங்கேற்று நேரத்தை மேம்படுத்துவேன்' என்கிறார், நீதிபதி தாமஸ்.
மத்தாப்பு சிரிப்புடன் நடனம்; மனம் கவர்ந்தார் இளம்பெண்
சண்டிகரைச் சேர்ந்த இளம்பெண் ஓஷீன் பாண்டியா, தன் அலுவலக தீபாவளி விழாவில் ஆடிய நடனத்தின் வீடியோ இன்ஸ்டாகிராமில், 2 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
நீலமும் பச்சையும் கலந்த அழகிய குர்தா உடையில், சினிமா பாடலுக்கு அவர் ஆடிய நடனத்தை கண்டு சக ஊழியர்கள் ஆரவாரம் செய்தனர்; சி லர் அவருடன் சேர்ந்து ஆடினர். வீடியோவை பார்த்த பலரும், அவரது நடன அசைவு களையும், அதற்கேற்ற முக பாவனைகளையும் பாராட்டினர். அவரது புன்னகையும் ஏராளமானோரை கவர்ந்தது. 'அலுவலகத்தின் கிரஷ் இவர் தான் போலிருக்கிறது' என்கின்றனர், வலைதள பிரியர்கள்.
என்று ஜெட் ஏர்வேஸ் வீணா போனதோ அன்றே இந்தியாவில் விமான சேவை நாசமாக போனது. இந்தியன் ஏர்லைன்ஸ், கிங்பிஷர் ஏர்லைன்ஸ், ஏர் டெக்கான், சஹாரா போன்ற விமான சேவைகள் ஒரு காலத்தில் வெகு விமரிசையாக கோலோசிய காலங்களும் உண்டு. ஆனால் எல்லாம் ஒருங்கே மடிந்து போனதுதான் இந்திய விமான சேவைகளின் சோகம், துரதிர்ஷ்டம்.
சீமானுடனேயே பழகிய நடிகை விஜயலெஷ்மி விமானத்தின் கீழ் படுத்ததை
கண்டு ஆச்சரியப்பட
ஏதுமில்லை!
அந்த விஜயலட்சுமி அல்ல இவர் வேறுமேலும்
-
பக்தர்கள் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன்
-
ராஜஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு; ரயில்கள் ரத்து
-
எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் வேட்புமனு நிராகரிப்பு; போட்டியின்றி எம்பியாகிறார் ஹர்தீப் சிங் புரி
-
டிரைவருக்கு வலிப்புவிபத்தில் சிக்கிய கார்
-
பனை விதைகள் நடவு
-
பஸ் ஸ்டாண்டில் சடலம் கொலை செய்து வீச்சா?