பழநி கோயிலில் ரோப்கார் சோதனை ஓட்டம்

பழநி:திண்டுக்கல்மாவட்டம்பழநி முருகன் கோயில்ரோப்காரில்ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது. ரோப்காரின் கியர்பாக்ஸ் அக்.,20ல் பழுதாகி நின்றது. உடனே ரோப்காரில்இருந்த பக்தர்கள் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். அன்றுமுதல் ரோப்கார் சேவை நிறுத்த ப்பட்டதுடன் ஆன்லைன் மூலம் முன்பதிவும் நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில்பழுதான ரோப்காரின் கியர்பாக்சை கழற்றி அதனை ச ரி செ ய்ய கோவைக்கு அனுப்பி வைத்தனர்.நேற்று பழுது நீக்கப்பட்டு வந்த கியர் பாக்சை மீண்டும்ரோப்காரில் பொருத்தி, அத்துடன் 8 பெட்டிகளை
இணைத்து சோதனை ஓட்டம் நடந்தது.

தொடர்ந்து ஒரு பெட்டிக்கு 300 கிலோ வீதம் எட்டு பெட் டிகளுக்கு 2.4 டன் எடையை படிப்படியாக ஏற்றி சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. இதனை இன்ஜினியர்கள் சோதனை செய்து முடித்ததும் விரைவில் ரோப்கார் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement