பூசணிக்காய் கிலோ ரூ.7
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டில் அர்ஜூனா பூசணிக்காய் விலை குறைந்து கிலோ ரூ.7க்கு விற்பனை ஆனது.
இம்மார்க்கெட்டுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்களில் விளையும் காய்கறிகளும் விற்பனைக்கு வருகிறது. பல்வேறு பகுதிகளில் விளைந்த அர்ஜுனா ரக பூசணிக்காய் லாரிகள் மூலம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
வரத்து அதிகமாக உள்ள நிலையில் உள்ளூர், கேரள வியாபாரிகள் அதிகளவு வாங்கிச் செல்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு கிலோ அர்ஜுனா பூசணிக்காய் ரூ.10க்கு விற்ற நிலையில் நேற்று ரூ.7க்கு விற்பனையானது.
கமிஷன் கடை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், 'அடுத்து வரும் நாட்களில் வரத்து இன்னும் அதிகரிக்கும் என்பதால் விலை குறைய வாய்ப்புள்ளது' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நேபாள ஹெலிகாப்டர் விபத்தில் தமிழர் உயிரிழப்பு
-
புயலுக்கு முரசு என்ற தமிழ்ப் பெயர் சூட்டியது எப்படி? சுவாரஸ்ய தகவல் இதோ!
-
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கல்; சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்
-
மேற்காசியாவில் மீண்டும் பதற்றம்; ஈரான் மீது அமெரிக்காவின் ரகசியத் தாக்குதல்
-
புயலால் 2வது நாளாக இன்றும் பாதிப்பு; சென்னை-ஆந்திரா செல்லும் 4 விமானங்கள் ரத்து
-
இன்றும் உயர்ந்தது தங்கம் விலை; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.560 உயர்வு
Advertisement
Advertisement