மதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை: ரூ.6.79 லட்சம் பறிமுதல்

மதுரை: மதுரை கருப்பாயூரணி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.6.79 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மாநிலம் முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்களில் இன்று (நவ.,2) திடீர் சோதனை நடந்தது. மதுரை கருப்பாயூரணி அலுவலகத்திலும் பணியாளர்கள், ஆவண எழுத்தர்கள் மூலம் லஞ்சம் பெறப்படுவதாக தகவல் கிடைத்தது.

4 மணிநேர விசாரணை





லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜெயப்பிரியா, குமரகுரு, சூரியகலா மாலையில் சோதனையை தொடங்கி 4 மணிநேரம் நடத்தினர்.

இதில் சொத்து விற்பனையாளர் விக்னேஷ்வரனிடம் ரூ.6 லட்சத்து 61 ஆயிரத்து 700, நிலத்தரகர் ரவிச்சந்திரனிடம் ரூ. 10 ஆயிரம், விவசாயி மகாராஜாவிடம் ரூ. 8 ஆயிரம் என மொத்தம் ரூ. 6 லட்சத்து 79 ஆயிரத்து 700 கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. சார் பதிவாளர் முருகேசன் உள்ளிட்டோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.

Advertisement