வங்கதேசத்தில் ஆடை தொழிலாளர்கள் போராட்டத்தில் வன்முறை; கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி
டாக்கா: வங்கதேசத்தில், ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள், ஊதிய உயர்வு கோரி நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் ஆயத்த ஆடை தொழில், ஏற்றுமதி வருவாயில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை கொண்டுள்ளது.
அங்கு 40 லட்சம் ஆடை தொழிலாளர்கள் உள்ள நிலையில், பல ஆண்டுகளாக ஊதியத்தை உயர்த்தவில்லை என்று கூறி அவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தலைநகர் டாக்காவின் மிர்பூர் மற்றும் காஜிபூரின் கோனாபரி போன்ற பகுதிகளில் நேற்றும் போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்தும், காவல் நிலையங்களை சூறையாடியும் வன்முறையில் ஈடுபட்டனர்.
வன்முறையைக் கட்டுப்படுத்த, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர். அங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடை தொழிற்சாலைகள் உள்ள நிலையில், 670 ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
சென்னையில்ஒரு நிறுவனத்தில் 60 களில் நடந்ததாக படித்த ஒரு சம்பவம் அங்கு சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தம் கதவடைப்பு எல்லாம் நடந்தபின் அப்போதைய முதலமைச்சர் காமராசர் தொழிலாளர்களுடன் பேச அலைவலகத்துக்குவந்து முதலில் தொழிலாளர்களை சத்தம் போட்டாராம் .முதலாளி ஒழிக என்று கோஷம்போடறீங்க முதலாளிகள் ஒழிஞ்சிட்டா யாரு கம்பெனிகளை நடத்தறது எல்லாம் அரசு செய்ய முடியாது .தனியார் பங்களிப்போடதான் சமூகம் செயல்படும்.அதை முதலில் தெரிந்து கொள்ளுங்க .பின் முதலாளிகளை பார்த்து தொழிலாளி எட்டணா கேட்டால் இரண்டணா வாஸ்து உயர்த்திக் கொடுங்க அவங்க உங்க கிட்ட கேக்காம யார்கிட்ட கேப்பாங்கன்னு சொல்லி .சில தொழிலாளர்களை மன்னிப்பு கேட்க வைத்து மூடியிருந்த நாட்களுக்கு அரை சம்பளம் வாங்கிக்கொடுத்து சமரசம் பண்ணி வைத்தாராம் .அதுபோல் மனித நேய மிக்க தலைவர்கள் உலகத்திலேயே இல்லை .மேலும்
-
படுக்கையானது ஓடுபாதை; விமான பயணியர் வெறுப்பு
-
விரக்தி!பயணியை தடுத்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை: கண்துடைப்பாக நடந்த பேச்சுவார்த்தையால் மக்கள்
-
தாலுகா அலுவலகத்திற்குள் ஆறாக ஓடும் காவிரி குடிநீர்
-
தேனி, கோவையில் இன்று இடி, மின்னலுடன் கனமழை
-
பழநி கோயிலில் ரோப்கார் சோதனை ஓட்டம்
-
மீட்டெடுக்கப்படுமா ... அழிவின் விளிம்பில் கொடைக்கானல் மலை ஆரஞ்சு : நோய் தாக்குதலால் சாகுபடி பரப்பும் குறைந்தது