ராமாயணம் -1 படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு : முன்பதிவில் ரூ.46 கோடி குவித்து சாதனை
- சிறப்பு நிருபர் -
பாலிவுட்டில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகிய படம் ராமாயணம் பாகம்-1. ரன்பீர் கபூர் கடவுள் ராமராகவும், சாய் பல்லவி கடவுள் சீதாவாக நடித்துள்ளனர். ராவணன் வேடத்தில் கன்னட நடிகர் யஷ் நடித்துள்ளார். வரும் 5ம் தேதி படம் வெளியாகும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
இதனால் இப்படத்தின் முன்பதிவில் மட்டும் ரூ.45.96 கோடி வசூலாகியது. ரூ.50 கோடியை நெருங்கி வருகிறது.
இன்று காலை 2 மணி நிலவரப்படி, இந்தியாவில் மட்டும்,1708 சினிமா தியேட்டர்களில் 35,697 காட்சிகளுக்காக 11.01 லட்சம் டிக்கெட்கள் விற்றன.
முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகள் மட்டுமின்றி, நேரடியாக விற்பனை செய்த டிக்கெட் வாயிலாக மட்டும் ரூ.36.85 கோடி வசூலாகியது.
முதல் நாளுக்கு மட்டும் ரூ.25.39 கோடி டிக்கெட் வசூலாகியது.
நகரங்கள் வாரியாக
டில்லி என்சிஆர் பகுதியில் ரூ.6.78 கோடி
மும்பையில் ரூ.6.08 கோடி
பெங்களூருவில் ரூ.5.79 கோடி வசூல் ஆகியது.
மாநிலங்கள் வாரியாக
மஹாராஷ்டிராவில் -ரூ. 9.42 கோடி
கர்நாடகாவில் ரூ.7.15 கோடி
டில்லியில் ரூ.6.78 கோடி
குஜராத்தில்ரூ.3.71 கோடி
தெலுங்கானாவில் ரூ.2.93 கோடி வசூலானது.
மொழிவாரியாக
ஹிந்தி பதிப்புக்கு மட்டும் ரூ.38.70 கோடி
கன்னட மொழி பதிப்பில் ரூ.4.41 கோடி
தெலுங்கு பதிப்பில் ரூ.2.35 கோடியும்
தமிழ் பதிப்பிற்கு ரூ.4166 லட்சம்
மலையாள பதிப்பிற்கு ரூ.8.01 லட்சமும் முன்பதிவாகியது.
சர்வதேச அளவில் மட்டும் ரூ.33.23 கோடிக்கு இந்த படத்திற்கு முன்பதிவு நடந்துள்ளது.
மேலும்
-
ஆந்திராவில் கரையை கடக்க துவங்கியது முரசு புயல்: வெளுத்து வாங்கும் கனமழை; தமிழகத்திலும் அலர்ட்!
-
தமிழகம் நழுவவிட்ட முதலீடு; ஆந்திரா சென்றது ரூ.1,614 கோடி: மூன்று கொரிய நிறுவனங்கள் ஒப்பந்தம்
-
பிரபல ரவுடி குண்டாசில் கைது
-
புதுச்சேரியில் 5 மாநில உதயநாள் விழா
-
போக்குவரத்து விதி மீறிய 25 ஆயிரம் பேருக்கு அபராதம்: சீனியர் எஸ்.பி., திவ்யா
-
தம்பதியை வெட்டிய 7 பேருக்கு வலை