பொதுச்சொத்துகளை ஆக்கிரமித்து இயங்கும் மசூதி, சர்ச்சுகளுக்கு பட்டா வழங்குவதா? த.வெ.க., அரசுக்கு பா.ஜ., ஹிந்து முன்னணி கண்டனம்
சென்னை :'சொத்துரிமை ஆவணங்கள் இல்லாத, மசூதி, சர்ச்களுக்கு, நிலப்பட்டா வழங்க, த.வெ.க., அரசு திட்டமிட்டிருப்பது கண்டனத்திற்குரியது' என, தமிழக பா.ஜ., தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
எவ்வித சொத்துரிமை ஆவணங்களும் இல்லாத, ஆயிரக்கணக்கான மசூதிகள், சர்ச்சுகளுக்கு, நிலப்பட்டா வழங்குவதாக, த.வெ.க., அரசு அறிவித்துள்ளது. இது, அரசியலமைப்பு சட்டத்தின், அனைத்து எல்லைகளையும் மீறும் செயல்.
ஓட்டுக்காக, சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதற்காக, சட்ட விரோதமாக ஆக்கிரமித்தவர்களிடமே. அரசு நிலங்களை தாரைவார்ப்பது, திட்டமிட்ட மதவாத செயல்.இந்த சட்ட விரோத கட்டடங்கள், எவ்வித ஆவணங்களும் இல்லாமல், 25 முதல் 50 ஆண்டுகளாக செயல்படுவதாக, சிறுபான்மை நலத்துறை அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார்.
நில ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ், அவர்களை வெளியேற்றுவதற்கு பதிலாக, நிலத்தின் உரிமையை பரிசாக வழங்க, த.வெ.க., அரசு தயாராகி வருகிறது.
பொதுச்சொத்துகளில் உள்ள, அங்கீகரிக்கப்படாத மத கட்டமைப்புகளை; கோவில், மசூதி, சர்ச் என எதுவாக இருந்தாலும் அகற்ற வேண்டும் என, உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் பல முறை தீர்ப்பளித்துள்ளன.
கடும் கண்டனம்
கோவில் நிலங்களை மீட்கும்போது, பொது நிலங்களில் உள்ள ஹிந்து மத கட்டமைப்புகளுக்கு, வெளியேற்ற அறிவிப்புகள் வழங்கப்படுகின்றன. ஆனால், சிறுபான்மையின மதத்தவரின் ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு மட்டும் பட்டா வழங்க, த.வெ.க., அரசு முன்வருவது, கடும் கண்டனத்திற்குரியது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:
மசூதிகள், சர்ச்சுகளுக்கு, உரிய சொத்துரிமை ஆவணங்கள் இல்லாதபோதும், நிலப்பட்டா வழங்குவதாக த.வெ.க., அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே, பல பகுதிகளில், சட்ட விரோதமாக வழிபாட்டு தலங்கள் கட்டப்படுவதால், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
அரசு நிலங்களை, ஆக்கிரமிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசே, அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவது எந்த வகையில் நியாயம்? ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கவும், கட்டடங்களை அகற்றவும் நீதிமன்றங்கள் பலமுறை உத்தரவிட்டுள்ளன.
பாரபட்சமானது
அரசு நிலங்களில், ஹிந்து கோவில்கள் இருந்தால் அகற்றப்படும் நிலையில், மசூதிகள், சர்ச்சுகளுக்கு மட்டும் பட்டா வழங்குவது பாரபட்சமானது. ஏற்கனவே, வக்ப் சொத்து தொடர்பான பிரச்னைகளால் கரூர் மாவட்டம் திருச்செந்துறை, ஈரோடு மாவட்டம் பவானி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உரிய ஆவணங்கள் இன்றி ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களுக்கு பட்டா வழங்கும் அறிவிப்பு ஹிந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதி. ஓட்டு வங்கி அரசியலுக்காக வெளியிடப்பட்ட இந்த உத்தரவை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது பிஜேபி க்கு தமிழகத்தில் இருக்கிற நாலைந்து ஓட்டுகளும் காணாமல் போவதற்கான வழியாகும். உடனே செய்துவிடுங்கள்.
பாரதம் ஒரு ஹிந்து ராஷ்ட்ரம் என அறிவிக்கணும்.
ஓட்டுரிமையும் சர்க்கார் சலுகைகளும் ஹிந்துக்களுக்கு மாத்திரம் கொடுக்கவேண்டும்.
ஹிந்து கோவில்களை தவிர வேறு எந்த மதத்தினரும் கோவில் நிலங்கள் வைத்துக்கொள்ளக்கூடாது என்று சட்டம் கொண்டுவரணம்.
ஹிந்துக்கள் நலம் அப்பத்தான் காக்கமுடியும்
இங்கே உள்ள இந்துக்களிடம் விழிப்புணர்வு ஏற்படாதவரை, இது போன்ற வாக்கு வங்கி அரசியல் கருதிய நிகழ்வுகள், துணிச்சலாக நடக்கும்.
பாஜக ஒரு விசித்திரமான கட்சி. இது மாதிரி விஷயங்களுக்கு முழு நீளத்திற்கு அறிக்கை மட்டும் விடுவார்கள். அத்தனை வக்கீல்களை கையில் வைத்துக் கொண்டு இதற்கு வழக்கு பதிய துணிய மாட்டார்கள்.தினமும் ஏதாவது பேசவேண்டும் என்று பேசுகிறார்களா என்று தெரியவில்லை.
சரியான கருத்து ... உண்மையில் இந்துக்கள் பாஜக அணியில் ஒன்று சேர தயக்கம் காட்டுகிறார்கள் .. ஏனெனில் இவர்கள் என்று என்ன செய்வார்கள் என்று தெரியாது ? திடீரென்று இவர்களும் மதசார்பற்ற வாதத்தை கையிலெடுத்து கொண்டு இந்துக்கள் முகத்தில் கரியை பூசி விடுவார்கள் என்று பயப்படுகிறார்கள்... திருட்டு திமுக போன்ற கட்சிகள் திருடர்களுக்கு கூட ஆதரவாக பின்னால் நிற்கிறது ... ஆனால் பாஜக இது போன்ற அநியாயங்களுக்கு குரல் குடுக்க்க கடுமையான நடவடிக்கை எடுக்க இந்துக்களுக்கு ஆதரவாக வர தயக்கம் காட்டுகிறது ... மத்தியில் ஆட்சி இருந்தும் பயனில்லாமல் இருக்கிறது ... யோகி ஆதித்ய நாத் போன்று தமிழகத்தில் ஒருவர் தேவை ...
சிறுபான்மையினர் வாக்குகளைக் குறிவைத்துப் பெறுவதில் போட்டியே நிலவுகிறது .....
சும்மா பொதுவா அறிக்கை விட்டுகிட்டு இருந்தா ஒரு பிரயோஜனமும் இல்லை,
என்னதான் கத்தினாலும் நம்ம ஊர் இந்துக்களில் பெரும்பாலோருக்கு சொரணை இல்லை.
இயற்கை தான் இந்துக்களை காப்பாற்றும், முடிந்த வரை இந்துக்களுக்காக உழைக்கும் எல்லா இந்து இயக்கத்திற்க்கும் மனமார்ந்த நன்றி
பட்டா என்பது என்ன ?அதுஒன்றும் சொத்துக்கான உரிமையில்லையே பட்டா என்பது விலை நிலங்களுக்கும் ,வீட்டு மனைப்பிரிவுகளுக்கும் வரிவித்திப்பு காரணத்திற்க்காக ஒருங்கிணைக்கப்பட்ட வருவயித்துறை பதிவேடு .அது வரிசைப்படி எண்கள் வழங்கப்பட்டு நிர்வாக காரணத்திற்காக ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டது .அதை புத்தக வடிவில் நில உரிமையாளர்களுக்கு வழங்கிட 1983 இல் பட்டா புத்தக சட்டம் இயற்றப்பட்டது .அந்த சட்டத்தில் இது அரசு நிலங்கள் ,கிராம நத்தங்கள் ,மேய்ச்சல் நிலங்களுக்கெல்லாம் பொருந்தாது என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது
இந்திய குடிமக்கள் அல்லாதவரை அந்நியர் என்று சட்டம் கருதுவது போல் இந்தியாவில் அந்நிய மதங்களை கருத வேண்டும். மத மாற்றம் உள்நோக்கம் கொண்டது.மேலும்
-
விரக்தி!பயணியை தடுத்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை: கண்துடைப்பாக நடந்த பேச்சுவார்த்தையால் மக்கள்
-
தாலுகா அலுவலகத்திற்குள் ஆறாக ஓடும் காவிரி குடிநீர்
-
தேனி, கோவையில் இன்று இடி, மின்னலுடன் கனமழை
-
பழநி கோயிலில் ரோப்கார் சோதனை ஓட்டம்
-
மீட்டெடுக்கப்படுமா ... அழிவின் விளிம்பில் கொடைக்கானல் மலை ஆரஞ்சு : நோய் தாக்குதலால் சாகுபடி பரப்பும் குறைந்தது
-
மதுரை மாநகராட்சியில் குப்பை அகற்ற ரூ.270 கோடிக்கு டெண்டர் 81 வார்டுகளில் ஏற்பாடு