இருவர் தற்கொலை

நத்தம்: நத்தம் அருகே புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பிரபாகரன் 31. இவரது மனைவி நித்யா 25. தம்பதி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்ட நிலையில் பிரபாகரன் நேற்று பேட்டைக்குளம் புளியமரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுப்பட்டியை சேர்ந்தவர் தொழிலாளி பிரபு 35. இவரது மனைவி மோகனவள்ளி 29. கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மோகனவள்ளி அக்.,31ல் வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனில்லாமல் நேற்று இறந்தார். இந்த இரு சம்பவங்கள் குறித்து நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement