காத்திருப்பு போராட்டம்
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்குறிச்சி குரும்பபட்டியில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இதன் அருகே கோயில், அரசு மருத்துவமனை, குடியிருப்புகள் உள்ளதால் கடையை இடமாற்றம் செய்யக்கோரி தமிழர் தேசம் கட்சியினர், அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அக்.,24ல் செங்குறிச்சியில் 500க்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்நிலையில் செங்குறிச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே தமிழர் தேசம் கட்சி நிர்வாகிகள் பூமி, பிரபு ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை நேற்று தொடங்கினர். டாஸ்மாக் கடையை அகற்றும் வரை சுழற்சி முறையில் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ள நிலையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்
-
ஊருணியில் மணல் திருடிய 2 பேர் கைது
-
ஓய்வூதியர் உயிர் வாழ்வு சான்று சமர்பிக்க வாய்ப்பு: தபால் கண்காணிப்பாளர் தகவல்
-
நெருக்கடி தேவகோட்டையில் போலீஸ் பற்றாக்குறையால் போக்குவரத்தை கட்டுப்படுத்த கூட முடியவில்லை
-
வீடுகள் மீது வாகனங்கள் சாயும் ஆபத்து
-
ஐயப்பசுவாமி கோவிலில் மண்டல பூஜை ஆலோசனை
-
பழைய கட்டடத்துக்கு புதுக் கலைநயம் இடிக்காமல் அழகாக்கும் ஹர்ஷினி!