ஓய்வூதியர் உயிர் வாழ்வு சான்று சமர்பிக்க வாய்ப்பு: தபால் கண்காணிப்பாளர் தகவல்

சிவகங்கை: சிவகங்கை தபால் கோட்டத்தில் மத்திய, மாநில அரசு ஓய்வூதியர் உயிர்வாழ் சான்று சமர்பிக்க ஏற்பாடு செய்துள்ளதாக கோட்ட கண்காணிப்பாளர் சுசீலா தெரிவித்தார். அவர் கூறியதாவது, மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவதற்காக ஆண்டுதோறும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்பிக்க வேண்டும். வயது முதிர்ந்த ஓய்வூதியதாரர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (IPPB) மூலம் வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்று சமர்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டப்படி தபால்காரர்கள் வீடுகளுக்கே நேரில் வந்து பயோமெட்ரிக் அல்லது முக அடையாளம் சரிபார்ப்பு முறைக்கு பின் டிஜிட்டல் உயிர் வாழ் சான்றினை வழங்குவர். இச்சேவை பெற விரும்புவோர் தங்கள் பகுதி தபால்காரரை அணுகி சேவை கட்டணம் ரூ.70 செலுத்தி, ஆதார், அலைபேசி எண், ஓய்வூதிய எண், வங்கி கணக்கு விபரத்தை வழங்க வேண்டும். அடையாளங்களை சரிபார்த்த பின் சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்று சமர்பிக்கலாம். ஓய்வூதியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்றார். ///

Advertisement