பழைய கட்டடத்துக்கு புதுக் கலைநயம் இடிக்காமல் அழகாக்கும் ஹர்ஷினி!
பழைய கட்டடத்தையும் புதுமையான கலைநயத்துடன் அழகாக்க முடியும் என்பதைத் தனது வடிவமைப்புகள் மூலம் நிரூபித்து வருகிறார், கோவை சித்தாபுதூரைச் சேர்ந்த ஆர்க்கிடெக்ட் ஹர்ஷினி.
மூன்று ஆண்டுகளாக ‘1:1 Concepts’ என்ற கிரியேட்டிவ் நிறுவனத்தை நடத்தி வரும் இவர், ஓவியங்கள், கலைப்படைப்புகள், 2டி மற்றும் 3டி வடிவமைப்புகள் மூலம் பல இடங்களுக்கு அழகான புதிய அடையாளத்தை உருவாக்கி வருகிறார்.
அமைதியைத் தரும் அலுவலகம்!
“பலரும் வீட்டைவிட அலுவலகத்தில்தான் அதிக நேரம் செலவிடுகின்றனர். எனவே, பணியிடங்கள் மனதுக்கு அமைதியையும் புத்துணர்ச்சியையும் தரும் வகையில் இருக்க வேண்டும். இதனால்தான் எங்களுடைய பெரும்பாலான வடிவமைப்புப் பணிகள் அலுவலகங்களை மையமாகக் கொண்டுள்ளன” என்கிறார் ஹர்ஷினி.
30 ஆண்டு கட்டடத்துக்கு மறுவாழ்வு!
இவரது குழுவின் முக்கியமான பணிகளில் ஒன்று, 30 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கட்டடத்தில் அமைந்திருந்த தோல் சிகிச்சை நிலையத்தைப் புதுப்பித்தது.
கட்டடத்தை இடிக்காமல், ஏற்கனவே இருந்தவற்றைப் பயன்படுத்தியே புதிய கலைநயத்துடன் மாற்றியமைத்துள்ளனர்.
ஓவியங்கள், வண்ணங்கள், விளக்குகள் என அனைத்தையும் திட்டமிட்டு, நோயாளிகளுக்கு அமைதியான சூழலை உருவாக்கியதுடன் செலவையும் கட்டுக்குள் வைத்துள்ளனர்.
“இன்றைய மக்கள் ஆடம்பரத்தை விட எளிமையாகவும் அழகாகவும், மனதுக்கு அமைதியளிக்கும் இடங்களையே விரும்புகின்றனர். இடத்தின் தன்மை, பயன்பாடு, மக்களின் தேவை, பட்ஜெட் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே வடிவமைப்புகளை உருவாக்குகிறோம்” என்கிறார்.
பழையதை இடிப்பதல்ல புதுமை; இருப்பதிலேயே புதிய அழகைக் கண்டறிவதுதான் உண்மையான கலை என சொல்லும் இவரை, 77080 90204 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
– பிரவீணா.
மேலும்
-
சோனியா சுயசரிதையில் 55 பிழைகள்!
-
தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ரூ.148.91 கோடி கோவில் நிலங்கள் மீட்பு; இந்து அறநிலையத்துறை
-
நியூயார்க்கில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
-
காஷ்மீரில் போலீஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகள் அட்டூழியம்
-
கலெக்டருக்கு டார்ச்சர்; கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது டிஜிபியிடம் அதிமுக புகார்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3520 குறைவு