ஊருணியில் மணல் திருடிய 2 பேர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை பெரிய ஊருணி பகுதியில் அனுமதியின்றி மணல் திருடுவாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வாலாந்தரவை வி.ஏ.ஓ.,உதயசூரியா தலைமையில் அரசு அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளியது தெரியவந்தது. அங்கிருந்த 2 பேர் தப்பியோடிய நிலையில் வாலாந்தரவை சோலை ராஜன் மகன் சங்கர் 47, ஆற்றங்கரை காந்திநகர் ராசு மகன் கோபிநாத் 25 ஆகியோரை பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர். வி.ஏ.ஓ., புகாரில் கேணிக்கரை போலீசார் இருவரையும் கைது செய்தனர். தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.––

Advertisement