மாநில தடகளம்

மதுரை: பள்ளிக் கல்வித்துறை சார்பில் சேலத்தில் குடியரசு தின மாநில தடகள போட்டிகள் நடந்தன. ஆடவர் 17 வயது பிரிவு 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை 48.96 வினாடிகளில் கடந்த மதுரை செயின்ட் ஜான் பள்ளி மாணவர் பவேஷ் இளங்கோவன் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார். பயிற்சியாளர் முத்துப்பாண்டி, உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர் பாராட்டினர்.

Advertisement