பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.5,000 வழங்க மனு
நாமக்கல்: 'பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதம், 5,000 ரூபாய் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தேசிய பார்வையற்றோர் இணையம், தமிழ்நாடு கிளை சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, பல ஆண்டுகளாக மாதாந்திர உதவித்தொகையாக, 1,500 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அண்டை மாநிலங்களில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதாந்திர ஓய்வூதியமாக, 1,600 முதல், 6,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.தற்போதைய விலைவாசி உயர்வுக்கு மத்தியில், 1,500 ரூபாய் உதவித்தொகையை கொண்டு, அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது மிகவும் சிரமமாக உள்ளது. அதனால், தமிழக அரசு வழங்கும் மாதாந்திர உதவித்தொகையை, 1,500லிருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்
-
உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்க சிஐஎஸ்எப் எடுத்த முடிவு
-
தீபாவளி நேரத்தில் அதிரடி ஆய்வு: மஹாராஷ்டிராவில் ரூ.9 கோடி உணவுப் பொருட்கள் பறிமுதல்
-
நேபாள ஹெலிகாப்டர் விபத்தில் தமிழர் உயிரிழப்பு
-
புயலுக்கு முரசு என்ற தமிழ்ப் பெயர் சூட்டியது எப்படி? சுவாரஸ்ய தகவல் இதோ!