கபடி சங்க நிர்வாக தேர்தல் முறையாக நடத்தக்கோரி மனு
நாமக்கல்: 'நாமக்கல் அமெச்சூர் கபடி சங்கத்திற்கான நிர்வாக தேர்தல் முறையாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ப.வேலுார் அணிச்சம்பாளையத்தை சேர்ந்த மாநில கபடி வீரர் ஜெயக்குமார், நாமக்கல் எஸ்.பி.,யிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெச்சூர் கபடி சங்கத்திற்கான நிர்வாக தேர்தல் முறையாக நடக்கவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கபடி சங்கங்களுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, டில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் தேசிய விளையாட்டு மேம்பாட்டு விதிகள் ஆகியவற்றின் அடிப்படையில், சங்க தேர்தல் நடத்த வேண்டும்.இந்நிலையில், நாமக்கல் மாவட்ட அமெச்சூர் கபடி சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் மற்றும் சாம்பியன்ஷிப் போட்டிகள், வரும் நவ., 9 முதல், 11 வரை, ராசிபுரம் தாலுகா, மலையாளப்பட்டி கிராமத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணாக நடத்தப்பட உள்ள சங்க தேர்தல் மற்றும் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தடை விதித்து, சட்ட விதிகளின்படி முறையான தேர்தல் நடத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்
-
உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்க சிஐஎஸ்எப் எடுத்த முடிவு
-
தீபாவளி நேரத்தில் அதிரடி ஆய்வு: மஹாராஷ்டிராவில் ரூ.9 கோடி உணவுப் பொருட்கள் பறிமுதல்
-
நேபாள ஹெலிகாப்டர் விபத்தில் தமிழர் உயிரிழப்பு
-
புயலுக்கு முரசு என்ற தமிழ்ப் பெயர் சூட்டியது எப்படி? சுவாரஸ்ய தகவல் இதோ!