ஏலச்சீட்டில் ரூ.12 லட்சம் மோசடி தலைமறைவாக இருந்தவர் கைது
குமாரபாளையம்; ஏலச்சீட்டு நடத்தி, 12 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர், மூன்றாண்டுகளுக்கு பின் கைது
செய்யப்பட்டார்.
குமாரபாளையம் அருகே, சடையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சங்கர், 40; இவர், சடையம்பாளையம், சாமியம்பாளையம், கத்தேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களிடம், வாரச்சீட்டு, மாத சீட்டு நடத்தி, 100க்கும் மேற்பட்டோரிடம், 12 லட்சம் ரூபாய் வசூலித்து, திருப்பி வழங்க முடியாமல், 2023ல் தலைமறைவானார். இவர், நேற்று, குமாரபாளையம் அருகே, கத்தேரி பிரிவு பகுதிக்கு வந்துள்ளார். இவரை கண்ட பொதுமக்கள், 100க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு பணம் கேட்டுள்ளனர்.ஆனால், அவர் பணத்தை ஏமாற்றும் நோக்கத்தில் சாக்குபோக்கு சொல்லியதால், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சங்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து போலீஸ் ஸ்டேஷன் முன், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, பண மோசடி வழக்கில் சங்கரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
விரக்தி!பயணியை தடுத்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை: கண்துடைப்பாக நடந்த பேச்சுவார்த்தையால் மக்கள்
-
தாலுகா அலுவலகத்திற்குள் ஆறாக ஓடும் காவிரி குடிநீர்
-
தேனி, கோவையில் இன்று இடி, மின்னலுடன் கனமழை
-
பழநி கோயிலில் ரோப்கார் சோதனை ஓட்டம்
-
மீட்டெடுக்கப்படுமா ... அழிவின் விளிம்பில் கொடைக்கானல் மலை ஆரஞ்சு : நோய் தாக்குதலால் சாகுபடி பரப்பும் குறைந்தது
-
மதுரை மாநகராட்சியில் குப்பை அகற்ற ரூ.270 கோடிக்கு டெண்டர் 81 வார்டுகளில் ஏற்பாடு