மொபைல் திருடிய வழக்கில் 2 பேர் கைது

ஆத்துார்; ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில், மொபைல் போன் திருடிய வழக்கில் இருவரை, போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் சப்தம், 29. இவர், அதே பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில், முதல்வராக பணிபுரிகிறார். இவர் கடந்த அக்., 31ல், தனது இரு சகோதரிகளுடன், ஈரோட்டிற்கு துணி வாங்குவதற்காக, விழுப்புரம் - சேலம் அரசு பஸ்சில் சென்றுள்ளனர்.அதே நாள் இரவு, 10:30 மணியளவில், ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் இறங்கி 'டீ' குடிக்க கீழே இறங்கினர். அந்த 'டீ' கடையில், மொபைல் போனை வைத்திருந்தபோது, இருவர் அதை எடுத்துக் கொண்டு தப்பினர்.
ஆத்துார் டவுன் போலீசார், விசாரணை நடத்தி ஆத்துார், பாரதியார் தெருவை சேர்ந்த செந்தில்குமார் மகன் ஹரிஹரன், 23, ஆத்துார், கோட்டை சிவன் கோவில் தெரு முருகன் மகன் அன்புமணி, 22, ஆகியோரை கைது செய்தனர்.
இதில் அன்புமணி மீது, சேலம், பள்ளப்பட்டி, ஆத்துார் உள்பட ஆறு போலீஸ் ஸ்டேஷன்களில், ஆறு திருட்டு வழக்கு உள்ளது. ஹரிஹரன் மீது, ஆத்துார், தலைவாசல் ஸ்டேஷன்களில் திருட்டு, அடிதடி என, ஒன்பது வழக்கு உள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement