அசாமில் மோசடி கும்பல் கைது; பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்புடன் தொடர்பா என விசாரணை

1

- நமது நிருபர் -

அசாமின் குவஹாத்தியில் போலி வங்கி கணக்குகள் மூலம் பல கோடி ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்ட ஒரு கும்பலைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த மோசடி நெட்வொர்க்கிற்கு பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்புகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கும்பல் நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் போலி வங்கி கணக்குகளைப் பயன்படுத்தி, பல கோடி ரூபாய் நிதியை சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது அம்பலம் ஆனது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான மர்ஜினா பேகம் என்பவரின் எஸ்பிஐ வங்கிக் கணக்கில், வெறும் 47 நாட்களில் பல லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பணம் டெபாசிட் செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இந்தச் சந்தேகத்திற்குரிய பணப் பரிவர்த்தனை காரணமாக, இந்த மோசடி கும்பல் சிக்கியது. பணப் பரிவர்த்தனைகள் பாகிஸ்தான் உளவுத்துறை முகவர் ஒருவருடன் தொடர்பு உடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மோசடிப் பணம் ஏதேனும் தேசவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

Advertisement