கல்வித்தகுதி குறித்து சர்ச்சை; இந்தோனேசியா துணை அதிபர் பதவி ராஜினாமா
ஜகர்த்தா: இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் ஜோகோ விடோடோவின் மகன் ஜிப்ரான் ரகபுமிங் ராகா,39, துணை அதிபராக செயல்பட்டு வந்தார். இவரது கல்வித் தகுதி குறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில், அவருக்கு எதிராக அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அவரை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டன. இன்று துணை அதிபர் ராகா பதவி ராஜினாமா செய்துள்ளார். மக்கள் ஆலோசனை சபையின் தலைமையிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்தார்.
இந்தோனேசியா சட்டப்படி, துணை அதிபர் பதவி காலியானால் உடனடியாகப் புதிய தேர்தல் நடத்தப்படாது. அடுத்த 60 நாட்களுக்குள் அதிபரால் பரிந்துரைக்கப்படும் இரு வேட்பாளர்களில் ஒருவரை மக்கள் ஆலோசனை சபை துணை அதிபராக தேர்வு செய்யும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊழல் வழக்கில் கைதான மாஜி அமைச்சர் மகேஷூக்கு ஜாமின் இல்லை; வழக்கு ஒத்திவைப்பு
-
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் சந்திக்க தயார்; அமைச்சர் செங்கோட்டையன்
-
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு; 3வது நாளாக முதல்வர் விஜய் ஆலோசனை
-
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை; குண்டுவெடிப்புகள், சாலை மறியல்கள், தீ வைப்பு சம்பவத்தால் பரபரப்பு
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; பெயர் சேர்க்க டிச.,11 வரை அவகாசம்
-
டி.கே.சிவகுமார் சொல்வது எதுவும் நடக்காது; கர்நாடகா முதல்வருக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி
Advertisement
Advertisement