வாகனம் மோதி, நாய் கடித்து 2 மான்கள் பலி
திருவாடானை: திருவாடானை பகுதியில் வாகனம் மோதியும், நாய்கள் கடித்தும் 2 மான்கள் பலியானது. திருவாடானை அருகே இலுப்பக்குடி கிராமத்தில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய பெண் மான் ஒன்று வழிமாறி வந்துள்ளது. அப்போது அங்கு வந்த ஏராளமான நாய்கள் அந்த மானை கண்டதும் துரத்தி சென்று கடித்து குதறின. அந்த மான் தப்பிக்க முயன்று ஒரு பகுதியில் மயங்கி விழுந்து உயிரிழந்தது.
இதே போல் மற்றொரு சம்பவத்தில் திருச்சி–ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கோவனி அருகே சாலையை கடக்க முயன்ற ஒரு பெண் மான் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. பலத்த காயமடைந்த மான் அதே இடத்தில் இறந்தது. அந்த வழியாக மற்ற வாகனங்களில் சென்றவர்கள் மான் உடலை துாக்கி சாலை ஓரத்தில் போட்டனர். வனத்துறையினர் சென்று விசாரித்தனர். திருவாடானை பகுதியில் மான்கள் இறப்பு அதிகமாகி வருகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விரக்தி!பயணியை தடுத்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை: கண்துடைப்பாக நடந்த பேச்சுவார்த்தையால் மக்கள்
-
தாலுகா அலுவலகத்திற்குள் ஆறாக ஓடும் காவிரி குடிநீர்
-
தேனி, கோவையில் இன்று இடி, மின்னலுடன் கனமழை
-
பழநி கோயிலில் ரோப்கார் சோதனை ஓட்டம்
-
மீட்டெடுக்கப்படுமா ... அழிவின் விளிம்பில் கொடைக்கானல் மலை ஆரஞ்சு : நோய் தாக்குதலால் சாகுபடி பரப்பும் குறைந்தது
-
மதுரை மாநகராட்சியில் குப்பை அகற்ற ரூ.270 கோடிக்கு டெண்டர் 81 வார்டுகளில் ஏற்பாடு
Advertisement
Advertisement