தினசரி 6 காட்சி: காலை 6 மணி முதல் திரையிடலாம்; சினிமா துறையினருக்கு தமிழக அரசு அனுமதி
சென்னை: புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாளில் இருந்து ஒரு வாரத்திற்கு தினசரி 6 காட்சிகள் திரையிட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம் வருமாறு;
தமிழ் பிலிம் ஆக்டிவ் ப்ரொடியுசர்ஸ் அசோசியேஷன்ஸ், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன் வைத்தனர்.
அவற்றில் முக்கியமாக, தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடும் நாளிலிருந்து ஒரு வார காலத்திற்கு திரைப்படங்களை நாளொன்றுக்கு 6 காட்சிகள் காலை 6.00 மணியிலிருந்து அடுத்த நாள் அதிகாலை 2.30 மணி வரை திரையிட அனுமதியளிக்கும்படி கோரியிருந்தனர்.
1957ம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதியின் கீழ், தியேட்டர்களுக்கு வழங்கப்படும் 'சி' படிவ உரிம நிபந்தனை 14Aன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.
மேலும், தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள், வெளியிடப்படும் நாளிலிருந்து, 7 நாட்களுக்கு தினசரி 5 காட்சிகள் திரையிடவும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனி மற்றும் ஞாயிறுகளில் தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதியளிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.
திரைப்படத் துறை அளித்த கோரிக்கை குறித்து முதல்வர் விஜய் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் செய்ய உத்தேசித்தார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி 6 காட்சிகளுக்கு மிகாமல் காலை 6.00 மணியிலிருந்து அடுத்த நாள் அதிகாலை 2.30 மணி வரை திரையிட உத்தரவிட்டுள்ளார்.
உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தினசரி 6 காட்சிகள் திரையிடவும் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (35)
Bhaskaran - Chennai,இந்தியா
04 நவ,2026 - 19:13 Report Abuse
தமிழன் என்றுஒரு இனம் உண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு டாஸ்மாக் அவரது உயிராகும் சினிமா அவரது உணவாகும். 0
0
Reply
சத்யநாராயணன் - ,
04 நவ,2026 - 13:59 Report Abuse
விடியல் என்ற அரசை துரத்துவதற்காக வெற்றி என்ற கொள்ளிக்கட்டை அரசை தேர்ந்தெடுத்து சொரிந்து கொண்டு உடம்பை புண்ணாக்கி கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள் ஐயோ பாவம் 0
0
Reply
manian - ,
04 நவ,2026 - 11:18 Report Abuse
you restrict diwali celebrations.But allow theaters to show films without any limit. as it mints money like liquor.Tvk is disappointing 0
0
Reply
Rajasekar Jayaraman - ,
04 நவ,2026 - 08:03 Report Abuse
நடிகனின் ஆட்சியில் இதையும் விட அதிகமாக எதிர் பார்க்கலாம். 0
0
Reply
c.mohanraj raj - ,
04 நவ,2026 - 06:41 Report Abuse
24 மணி நேரமும் டாஸ்மார்க் கடையை திறக்கலாம் 24 மணி நேரமும் சினிமாவை ஓட்டலாம் 0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
04 நவ,2026 - 04:07 Report Abuse
ஆறு காட்சிகள் அனுமதித்தவுடன் தமிழகத்தில் யாருக்கும் பசி என்பதே இருக்காது. 0
0
Reply
வில்லிபுத்தூரான் - xhennai,இந்தியா
03 நவ,2026 - 23:30 Report Abuse
டாஸ்மாக், குத்தாட்டம் சினிமா மோகம்.இது தான் தமிழக இலட்சணம். 0
0
Reply
Ramesh R - Chennai,இந்தியா
03 நவ,2026 - 23:24 Report Abuse
முதல் அமைச்சரா இல்லை சினிமா துறை அமைச்சரா ? 0
0
Reply
RJ - ,இந்தியா
03 நவ,2026 - 22:53 Report Abuse
சினிமா பார்த்தே நாசமாக போன மாநிலம் தமிழகம் 0
0
Reply
Krishnan - Coimbatore,இந்தியா
03 நவ,2026 - 22:15 Report Abuse
ஏன் ஒரு 4 மணிக்கு வைத்தால் படிக்கும் மாணவர்கள் காலையில் படம் பார்த்து விட்டு அப்படியே பள்ளி, கல்லூரிக்கு போகலாமே. அப்படியே டாஸ்மாக்கையும் காலையில் 6 மணிக்கு திறந்தால் நல்லது. மாற்றம் நன்றாக உள்ளது. கேவலம். 0
0
Reply
மேலும் 25 கருத்துக்கள்...
மேலும்
-
கல்வித்தகுதி குறித்து சர்ச்சை; இந்தோனேசியா துணை அதிபர் பதவி ராஜினாமா
-
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் சந்திக்க தயார்; அமைச்சர் செங்கோட்டையன்
-
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு; 3வது நாளாக முதல்வர் விஜய் ஆலோசனை
-
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை; குண்டுவெடிப்புகள், சாலை மறியல்கள், தீ வைப்பு சம்பவத்தால் பரபரப்பு
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; பெயர் சேர்க்க டிச.,11 வரை அவகாசம்
-
டி.கே.சிவகுமார் சொல்வது எதுவும் நடக்காது; கர்நாடகா முதல்வருக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி
Advertisement
Advertisement