ஆசியாவின் டாப் 100 பல்கலை பட்டியலில் ஐஐஎஸ்சி பெங்களூரு, 5 ஐஐடிக்கள்; முழு விவரம் இதோ!

4

-நமது சிறப்பு நிருபர்-

உலகின் சிறந்த பல்கலை.களின் கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி செயல்பாடுகளை, பிரிட்டன் நாட்டில் உள்ள லண்டனை சேர்ந்த கியூ.எஸ்., எனும் 'குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்' என்ற நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.

அதன் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தலைப்புகளில், பல்கலை.களின் தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது. 2027ம் ஆண்டிற்கான ஆசிய அளவிலான சிறந்த பல்கலை.கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

பிராந்திய அளவிலான கடும் போட்டி காரணமாக டாப் 100 பட்டியலிலுள்ள அனைத்து முக்கிய இந்திய கல்வி நிறுவனங்களின் தரவரிசையும் கடந்த ஆண்டை விட சற்று சரிவடைந்துள்ளது. டெல்லி பல்கலைக்கழகம் இந்த முறை டாப் 100 பட்டியலில் இருந்து வெளியேறி இருக்கிறது.

டாப் 100க்குள் இருக்கும் இந்திய நிறுவனங்களின் பட்டியல்:

* ஆசிய அளவில் 66வது இடம் பெற்று இந்தியாவிலேயே ஐஐடி டில்லி முதலிடம் (கடந்த ஆண்டு 59).

* ஐஐஸ்சி பெங்களூரு 79ஆவது இடம் (கடந்த ஆண்டு 64).

* ஐஐடி பாம்பே 83வது இடம் (கடந்த ஆண்டு 71).

* ஐஐடி மெட்ராஸ் 85வது இடம் (கடந்த ஆண்டு 70).

* ஐஐடி கரக்பூர் 90வது இடம் (கடந்த ஆண்டு 77).

* ஐஐடி கான்பூர் 97வது இடம் (கடந்த ஆண்டு 77).

டாப் 10 பல்கலை பட்டியல்!

1. ஹாங்காங் பல்கலைக்கழகம், ஹாங்காங்.

2. பெக்கிங் பல்கலைக்கழகம், பீஜிங், சீனா.

3. சிங்குவா பல்கலைக்கழகம்- பீஜிங், சீனா.

4. ஹாங்காங் நகர பல்கலைக்கழகம்- கவ்லூன், ஹாங்காங்

5. ஹாங்காங் சீனப் பல்கலைக்கழகம்- ஹாங்காங்

6. புடான் பல்கலைக்கழகம்- ஷாங்காய், சீனா

7. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சிங்கப்பூர்

8. நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்- சிங்கப்பூர்.

9. ஹாங்காங் பாலிடெக்னிக் பல்கலைக்கழகம்-ஹாங்காங்

10. ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்- ஹாங்காங்

Advertisement