இண்டி கூட்டணி போராட்டத்தால் ரூ.14,000 கோடி இழப்பு: கமிஷனருக்கு கடிதம்

4

- நமது டில்லி நிருபர் -

தீபாவளி பண்டிகையின்போது நடத்தப்படும் தொடர் போராட்டங்களால் 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக டில்லி வர்த்தகர்கள் கூட்டமைப்பு, போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதிஉள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சமயத்தில், மீண்டும் போராட்டம் நடந்தால், வர்த்தகர்கள் கடைகளை பூட்டிவிட்டு, சாவிகளை போராட்டம் நடத்தும் அமைப்பாளர்களிடமே தர வேண்டிய நிலை ஏற்படும். 'இண்டி' கூட்டணி நடத்திய போராட்டத்தால் 2.50 லட்சம் கடைகள் அடைக்கப்பட்ட வகையில் சில்லரை மற்றும் மொத்த வர்த்தக இழப்பு 8,800 கோடி ரூபாய். சரக்கு வாகனங்கள் இயங்காததால் 1,500 கோடி ரூபாய் இழப்பு.

ஹோட்டல், சுற்றுலா மற்றும் உணவக துறைகளுக்கு 500 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 200 கோடி ரூபாய் அளவுக்கு தினக்கூலிகளுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அக்டோபரில் நடந்த போராட்டங்களால் 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டது. எனவே டில்லியின் புறநகர் பகுதிக்கு போராட்டக் களங்களை மாற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement