மாவட்ட அளவிலான கபடி போட்டி தடுக்க முயற்சி: கலெக்டரிடம் மனு
நாமக்கல்:'மாவட்ட
அளவிலான கபடி போட்டியை தடுக்க முயற்சிப்போர் மீது, நடவடிக்கை
எடுக்க வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர்
தமிழ்ச்செல்வன் தலைமையில் கபடி வீரர்கள், 200க்கும் மேற்பட்டோர்
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:
மாவட்ட
அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி வரும், 9
முதல், 11ம் தேதி வரை, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த
முள்ளுக்குறிச்சி மலையாப்பட்டியில் நடத்துவதற்கு தேவையான அனைத்து
ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
இந்நிலையில், ஒரு சிலர், மாவட்ட
சாம்பியன்ஷிப் கபடி போட்டியை எப்படியாவது தடுத்த நிறுத்த வேண்டும்
என, முயற்சி செய்து வருகின்றனர். மேலும், போட்டி நடத்தினால் பிரச்னை
செய்வோம் என மிரட்டி வருகின்றனர். நான் வகித்து வரும் பொறுப்புக்கும்,
தனிப்பட்ட நற்பெயருக்கும் பாதிப்பு ஏற்படுவதுடன், விளையாட்டு
வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் நலனும் பாதிக்கப்படும் சூழ்நிலை
உருவாகியுள்ளது. எனவே, அவர்கள் மீது உரிய விசாரணை செய்து சட்டப்படி
நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3520 குறைவு
-
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம்; திமுக பிரமுகர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கம்
-
தமிழகத்தில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்: நடவடிக்கை எடுக்க பாஜ வலியுறுத்தல்
-
ஹிமாசல்லில் பாரா கிளைடிங் விபத்தில் சுற்றுலாப் பயணி பலி
-
தூய்மையான நகரங்கள் பட்டியல்; விருதை வென்ற தமிழக நகரம் எது தெரியுமா?
-
சவுதி அரேபியாவில் சிக்கி தவித்த இந்திய மாலுமிகள் 4 பேர்; தக்க நேரத்தில் உதவிகரம் நீட்டிய தூதரகம்