தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3520 குறைவு

- நமது நிருபர் -

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் கடந்த வாரத்தில் அதிகரித்த தங்கம் விலை, இந்த வாரத்தில் குறைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (நவ.,10) ஆபரண தங்கம் கிராம், 13,210 ரூபாய்க்கும், சவரன், 1,05,680 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 205 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்றைய நிலவரம்

நேற்று (நவம்பர் 11), தங்கம் விலை கிராமுக்கு, 195 ரூபாய் குறைந்து, 13,015 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,560 ரூபாய் சரிவடைந்து, 1,04,120 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்து, 200 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரிவடைந்து, 2 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இன்றைய நிலவரம்

இன்று (நவம்பர் 12) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1600 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 520 ரூபாய்க்கும், கிராமுக்கு 200 ரூபாய் குறைந்து 12,815 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்ளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 3520 ரூபாய் குறைந்துள்ளது.

வெள்ளி விலை மாற்றிமின்றி கிராம் 200 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பிரத்யேக வீடியோ!

இன்றைய தங்கம் விலை நிலவரங்களை வீடியோ பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமா?

இங்கே ஒரு கிளிக்!

Advertisement