தமிழகத்தில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்: நடவடிக்கை எடுக்க பாஜ வலியுறுத்தல்
சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகிறது; எல்லையைக் கோட்டைவிட்டு வேடிக்கை பார்க்கும் தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை: தென்காசி மாவட்டத்தின் விவசாய நிலங்களிலும் திறந்தவெளிகளிலும், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து டன் கணக்கில் கொண்டு வரப்படும் அபாயகரமான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்படும் அவலம் தொடர்கதையாகி வருகிறது. கேரள மாநில விற்பனைக்கு மட்டும் என்று அச்சிடப்பட்ட பாட்டில்களும் நச்சுக் கழிவுகளும் கண்முன்னே ஆதாரமாகக் கிடந்தும், எல்லையோரச் சோதனைச் சாவடிகளைக் கண்காணிக்கத் திராணியின்றி முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு கும்பகர்ண தூக்கத்தில் ஆழ்ந்துள்ளது.
ஒரு குண்டூசி அளவிலான கழிவுப் பொருளைக்கூடத் தமிழகத்திலிருந்து கொண்டுபோய்க் கேரள எல்லைக்குள் கொட்டிவிட முடியுமா? அங்கு அந்த அளவிற்குச் சோதனைகளும் கண்காணிப்பும் மிகக் கடுமையாக உள்ள சூழலில், அண்டை மாநிலத்தின் நச்சுக் கழிவுகளை இங்கு கொட்டும் அளவிற்குத் தமிழக காவல்துறையும், தவெக அரசும் இத்தனை அலட்சியமாக இருக்கிறது. இது தென்காசியில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த எல்லையோர மாவட்டங்களிலும் தொடர்கிறது. பசுமையான நிலங்களை நஞ்சாக்கித் தமிழகத்தைக் கேரளாவின் குப்பைத் தொட்டியாக மாற்றும் இந்த ஆட்சியில், இன்னும் என்னென்ன கூத்துகளும் அவலங்களும் அரங்கேறப் போகின்றனவோ தெரியவில்லை.
இனியாவது இந்த மெத்தனப் போக்கைக் கைவிட்டு, கேரள முதல்வரிடம் பேசி இந்த விவகாரத்திற்கு முதல்வர் விஜய் உடனடியாக ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். எல்லையோரச் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி, கேரளக் கழிவுகளைத் தமிழகத்திற்குள் கடத்திவரும் வாகனங்களை உடனடியாகப் பறிமுதல் செய்வதோடு, மக்களின் சுகாதாரத்தோடு விளையாடும் சமூக விரோதிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
நான் பல நாட்களாக பதிவிட்டு வருகிறேன், இவ்வாறு கொண்டு வந்து கொட்டப்படும் கழிவுகளை தடுக்க சோதனை சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும்
தமிழ்நாட்டில் அண்ணாமலை இருந்த போது பிஜேபி வளர்த்தது. தற்போது பின்னோக்கி செல்கிறது.மேலும்
-
டி.கே.சிவகுமார் சொல்வது எதுவும் நடக்காது; கர்நாடகா முதல்வருக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி
-
சோனியா சுயசரிதையில் 55 பிழைகள்!
-
தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ரூ.148.91 கோடி கோவில் நிலங்கள் மீட்பு; இந்து அறநிலையத்துறை
-
நியூயார்க்கில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
-
காஷ்மீரில் போலீஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகள் அட்டூழியம்
-
கலெக்டருக்கு டார்ச்சர்; கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது டிஜிபியிடம் அதிமுக புகார்