'பயப்படாதீங்க... பார்லிமென்ட் வாங்க!': ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி
புதுடில்லி: பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா என சவால் விட்டு வரும் காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‛மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் எஸ்.ஐ.ஆர்., விவகாரம் குறித்து விவாதிக்க சிறப்பு பார்லி., கூட்டத்தொடரைக் கூட்ட அரசு தயார்; ராகுல் நேரில் வந்து விவாதிக்க தயாரா?" என சவால் விடுத்திருந்தார்.
ஆனால், இந்த சவாலை தவிர்த்த ராகுல், சமூக வலைதளத்தில் பிரதமர் மோடிக்கு மீண்டும் விவாதம் செய்ய சவால் விடுத்தார். அதில், பிரதமர் எந்த இடத்தை வேண்டுமானாலும் தேர்வு செய்யட்டும். நடுவராக மோகன் பகவத்தை கூட இருக்கலாம். நாட்டு மக்கள் முன்னிலையில் விவாதிக்க நான் தயார் என பதிவிட்டிருந்தார்.
ராகுலின் இந்த சவாலுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சரமாரி தாக்குதல்:
இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: விவாதத்திற்கு இடம் தேர்வு செய்யுமாறு பிரதமரிடம் ராகுல் கேட்கிறார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்திருக்கும் பார்லிமென்ட்டே அதற்கான இடம். எஸ்.ஐ.ஆர்., மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து விவாதிக்க சிறப்பு கூட்டத்தொடர் நடத்த தயார் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார்.
சமூக வலைதளங்களில் சவால் விடுவதில் காட்டும் ஆர்வத்தை பார்லி.,யில் காட்ட ராகுல் மறுக்கிறார். அரசிடம் கேள்வி கேட்டுவிட்டு, அரசு பதில் சொல்லும் போது வெளிநடப்பு செய்வது அவரது வழக்கம். மற்ற தரப்பு பதிலை கேட்கும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் இருக்க வேண்டும்.
காங்கிரஸ் தலைவர் வீட்டில் நடத்திய போலி பார்லிமென்ட் கூட்டம், பார்லி., மாண்பையே கேலி செய்வதாக இருந்தது. எப்போதும் பயப்படாதீர்கள் என்று பேசும் ராகுல், உண்மையான ஆதாரங்களுடன் களத்திற்கு வந்து, விவாதத்தை முழுமையாக எதிர்கொள்ளட்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் மட்டும் சவால் விட்டுவிட்டு, பார்லிமென்ட் விவாதங்களில் இருந்து நழுவும் ராகுலின் இரட்டை நிலைப்பாட்டை, நிர்மலா சீதாராமன் தற்போது கடுமையாக தோலுரித்து காட்டியுள்ளார்.
பார்லிமெண்ட் வளாகத்தில் பஜ்ஜி pagoda திங்க ரெடி.
வடிவேலு ஒரு படத்தில் சண்டைக்கு வா... சண்டைக்கு வா... என்று அழைப்பார்.... வந்த பிறகு.... தெருவுக்கு வா.... பிறகு வீட்டுக்கு வா என்று அழைப்பார்.... அந்த காமெடி தான் நினைவுக்கு வருகிறது.
விவாதம் செய்யும் இடம் பாராளுமன்றம்... அது கூட தெரியாமல்... அங்கே போக தைரியம் இல்லாமல்.. ராகுல் வாய் சவடால் விடுவது... அவரது இயலாமையை தான் காட்டுகிறது.
ராகுலிடம் விவாதம் செய்வதை விட, ஒரு கழுதையுடன் அந்த நேரத்தை சிறப்பாக செலவழிக்கலாம்.
அமெரிக்காவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில்... உங்கள் அணி இண்டி கூட்டணி தானே.... எப்படி இண்டியா கூட்டணியாகும் என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு.... வந்து... வந்து.. வந்து... என்று அவர் பதில் சொல்ல முடியாமல்.... எப்படி சமாளிக்கலாம். என்று தவித்த தவிப்பை பார்க்க வேண்டுமே ?... தான் ஒரு ராகுல் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்த தருணம் அது.
மக்கள் நம்பிக்கையை இழந்த ஒருவர் ராகுல் வின்சி பெரும்பான்மை பெற்ற பிரதமரை வலை தளத்தில் விவாதிக்க அழைப்பது மிகப் பெரிய கேலிக்கூத்து. இதிலேயே தெரியுது ராகுலின் முதிர்ச்சி என்ன என்று. பல முறை தோற்று தோற்று பைத்தியம் பிடித்து விட்டது.. நல்ல மருத்துவரை அணுகி வைத்தியம் பார்க்கவும். "பைத்தியமே கொஞ்சம் நில்லு வைத்தியரிடம் போய் சொல்லு" என்ற பழைய பாடல் நினைவுக்கு வருகிறது.
Which world Mayil vahanan is in ? Since the day she is in Parliament, she has been nonchallantly voicing her pro against all Khangis esp Pappu many a times and DMK MPs. Pappu has received puddings from Nirmalaji plenty of times and she is able to converse in Hindi as well and a lucid tamil language for all those who understand only Tamil. On many occassions when she is coming to respond, MPs quitely vanish and sit in the canteen.
kuyil vaganam is just ordinary 200 rupees party..everytime he gets brain down
yes parliament is the right forum to debate issues.why this man avoids parliament.parliament deliberations are live telecaste.He fears being exposed in front of the nation
வியட்நாமுக்கு உல்லாசப்பயணம் அனுப்புங்க .... போவாரு .....
14 வருஷமா பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தாத பெருமை யாரை சாரும் என்று மக்களுக்கு தெரியும் .. முதலில் நிர்மலா அம்மையார் தேர்தலில் நின்று 10 ஓட்டு பெறட்டும் பிறகு அடுத்தவர்கள் பற்றி பேசலாம்...
மன்மோகன் எந்தத் தேர்தலிலும் வென்றதில்லை. ஆனா உங்களுக்கு அவர் மேதை.
வாங்க நாதன்சாமி ரொம்ப நாள் ஆளையே காணோம்...
கோபிசெட்டி நாட்டாமை நாதன்சாமி வந்துட்டாரு
nathansami always keeps useless comments..funny
ஆனால் அவர் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் இருந்தது இல்லை ...
எல்லா ஏர்போர்ட் காண்ட்ராக்ட் ஐ அதானிக்கு கொடுப்பதுக்காக ரூல்ஸ் ஐ மாற்றல ...
தேர்தல் ஆணையர் தேர்தல் குழு ல நீதிபதியை நீக்கல ...
டாலருக்குநிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்த போது 2014 ல ஒரு ஆளு என்ன பேச்சு பேசுனாரு ...இப்போ அதை பற்றி வாய் திறக்க மாட்டாங்க ...
ஏமாறுகிறவன் இருக்கிறவரைக்கும் ஏமாத்துறவன் இருக்க தான் செய்வாங்க ...
இப்படி முட்டு மேல முட்டு குடுங்க ...வட நாட்டு மக்கள் இருக்கறவரைக்கும் உங்கள் ஜி கு வேட்டை தான் ...
மட சாம்பிராணி..நாதன் உமக்கு பிடிக்கலை என்றால் பப்புகூட வியட்நாம் போயிடு...உளறாதே
மன மோகனர் எந்த தேர்தலில் நின்று வெற்றி பெற்று பிரதமாராக ஆனார்? முட்டு திலகம்
இந்த பார்லிமெண்ட் கூட்ட தொடரை அனைவரும் கூர்ந்து கவனிக்க வேண்டும். யார் யாரை பேச விடாமல் தடுக்கிறார்கள், யார் ஆதாரங்களை முன் வைக்கிறார்கள், யார் மக்கள் நலன் கருதி செயல் புரிகிறார்கள் என்று தெளிவாக தெரிந்து கொண்டு வரும் தேர்தல்களில் வாக்களிக்க வேண்டும். இதை ஒரு பைனல் என்று கொள்ளலாம்.மேலும்
-
தமிழகத்தில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்: நடவடிக்கை எடுக்க பாஜ வலியுறுத்தல்
-
ஹிமாசல்லில் பாரா கிளைடிங் விபத்தில் சுற்றுலாப் பயணி பலி
-
தூய்மையான நகரங்கள் பட்டியல்; விருதை வென்ற தமிழக நகரம் எது தெரியுமா?
-
சவுதி அரேபியாவில் சிக்கி தவித்த இந்திய மாலுமிகள் 4 பேர்; தக்க நேரத்தில் உதவிகரம் நீட்டிய தூதரகம்
-
விலைவாசி உயர்வைக் கண்டித்து ஸ்பெயினில் பொதுவேலைநிறுத்தம்; போராட்டத்தில் வெடித்தது வன்முறை
-
இக்கட்டான தருணங்களில் மக்கள் ஒன்றிணைவார்கள்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்