இக்கட்டான தருணங்களில் மக்கள் ஒன்றிணைவார்கள்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்
-நமது நிருபர்-
இஸ்ரேலில் நடந்த பொதுத் தேர்தலில் எந்தவொரு கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் புதிய ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. பார்லிமென்ட் புதிய உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவில் பேசிய நெதன்யாகு, அரபுக் கட்சிகள் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும் இஸ்ரேலை அழிக்க நினைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
அரபுக் கட்சிகளின் ஆதரவுடன் எதிர்க்கட்சிகள் ஆட்சியமைக்க முயற்சிப்பதைக் கடுமையாக விமர்சித்ததால், சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். நெதன்யாகுவின் பேச்சு பிரிவினையைத் தூண்டுவதாகவும் வெறுப்புணர்வு கொண்டதாகவும் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட் பதிலடி கொடுத்து இருந்தார்.
தற்போது இஸ்ரேலில் தேசிய ஒற்றுமை அரசை அமைப்பது இன்னும் சாத்தியமே என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''தேசிய ஒற்றுமை அரசு ஏன் அவசியம் என்பதை நேற்று கூறினேன், இன்று அது ஏன் சாத்தியம் என்பதைக் கூற விரும்புகிறேன். இக்கட்டான தருணங்களில் இஸ்ரேல் மக்கள் ஒன்றிணைவார்கள். கூட்டணிக் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவேன்'' என்றார்.
மேலும்
-
விலைவாசி உயர்வைக் கண்டித்து ஸ்பெயினில் பொதுவேலைநிறுத்தம்; போராட்டத்தில் வெடித்தது வன்முறை
-
விவசாயிகளே எங்களின் முதல் முன்னுரிமை: பிரதமர் மோடி பெருமிதம்
-
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்காவுக்கு 7 நிபந்தனைகள் விதித்தது ஈரான்
-
தமிழகம் முழுவதும் நுாலகங்களில் அப்புறப்படுத்தப்படும் போலி நுால்கள்!
-
சீன உளவாளியுடன் ரகசிய தொடர்பு; என்விடியா சி.இ.ஓ., பதவி பறிப்பு?
-
இந்திய விசா வகை 9 ஆக குறைப்பு; விண்ணப்ப படிவங்களிலும் மாற்றம்!