விலைவாசி உயர்வைக் கண்டித்து ஸ்பெயினில் பொதுவேலைநிறுத்தம்; போராட்டத்தில் வெடித்தது வன்முறை
மேட்ரிட்: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் நிலவி வரும் வீட்டு வாடகை உயர்வு, விலைவாசி உயர்வால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வாழ்வாதார நெருக்கடியைக் கண்டித்து தேசிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 2012க்குப் பிறகு, மிகப்பெரிய தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் நடக்கும் இந்தப் போராட்டத்தில், 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மேட்ரிடில் 1.20 லட்சம் மக்களும், பார்சிலோனாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் கலந்து கொண்டனர். பார்சிலோனாவில் நடந்த போராட்டத்தில் குப்பைத் தொட்டிகளுக்குத் தீ வைப்பது, கடைகளின் கண்ணாடிகளை உடைப்பது, போலீசார் மீது பட்டாசுகளைக் கொளுத்திப் போடுவது போன்ற வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. சில கடைகளில் கொள்ளை சம்பவங்களும் நடந்துள்ளன. கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி போலீசார் கூட்டத்தை கலைத்தனர்.
ஸ்பெயினில் நவம்பர் 29ல் பார்லி பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு, மூன்று வாரங்களுக்கு முன்னதாக இப்போராட்டம் வெடித்துள்ளது.
மேலும்
-
தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ரூ.148.91 கோடி கோவில் நிலங்கள் மீட்பு; இந்து அறநிலையத்துறை
-
நியூயார்க்கில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
-
காஷ்மீரில் போலீஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகள் அட்டூழியம்
-
கலெக்டருக்கு டார்ச்சர்; கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது டிஜிபியிடம் அதிமுக புகார்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3520 குறைவு
-
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம்; திமுக பிரமுகர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கம்