போலி வீடியோ பதிவிட்ட மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது போலீசார் வழக்கு
-நமது நிருபர்-
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள், கச்சா எண்ணெய் கொள்முதல் குறித்து விமர்சிப்பது போன்ற ஒரு போலியாக எடிட் செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் பரவியது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் ரஷ்ய தூதரகம் வீடியோ போலியானது என்பதை உறுதி செய்தது.
இந்த போலி வீடியோவை மூத்த சுப்ரீம்கோர்ட் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இதை கண்டறிந்த டில்லி போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
தவறான தகவல்களைப் பரப்புதல், வதந்திகளை உருவாக்குதல், மற்றும் ஆள்மாறாட்டம் செய்தல் போன்ற குற்றங்களுக்காக பாரதிய நியாய சன்ஹிதா, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement