7 மாதங்களாக ‛கிரைம் ‘மீட்டிங்’ நடக்கல: ஆட்சி மாறியதால் கூட்டம் ரத்தா
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் போலீஸ் நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் கிரைம் மீட்டிங்’ 7 மாதங்களாக நடத்தப்படவில்லை. இதனால் மெட்லீப்ஆர்’ குறித்து தெரியாமல் போலீசார் மருத்துவமனைகளுக்கு அலையும் நிலை உருவாகியுள்ளது.
மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் குறைந்த பட்சம் மாதம் ஒரு முறையாவது போலீஸ் அதிகாரிகள், அரசு மருத்துவமனை டாக்டர்கள் இடம்பெறும் கிரைம் மீட்டிங்’ நடத்தப்படுவது வழக்கம்.
தி.மு.க., ஆட்சியில் இருந்த வரை தவறாது கிரைம் மீட்டிங்’ நடத்தப்பட்டது. அதனால் ஒரு ஸ்டேஷனில் பணிபுரியும் கான்ஸ்டபிள் வரை புதிய நடைமுறைகள் குறித்து தெரிந்து அதற்கு தகுந்தவாறு பணிபுரிந்து வந்தனர்.
ஆனால் மாவட்டத்தில் இறுதியாக மார்ச் மாதத்தில் மட்டுமே கிரைம் மீட்டிங்’ நடத்தப்பட்டுள்ளது. அதன் பின் தேர்தல் முடிந்து ஆட்சி மாறி புதிய எஸ்.பி., நியமனம் செய்த பின் இதுவரை 7 மாதங்களாக கிரைம் மீட்டிங்’ நடத்தப்படவில்லை.
இதனால் மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள மெட்லீப்ஆர்’ என்ற புதிய நடைமுறைகள் குறித்து போலீசாருக்கு தெரியாமல் உள்ளனர். அரசு மருத்துவமனையில் விபத்து, அடிதடி சம்பவங்களில் காயமடைந்தவர்களின் விவரங்களை அனுமதிக்கப்பட்ட போதே மெட்லீப்ஆர்’ இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மற்ற அரசு மருத்துவமனைக்கு மாற்றினாலும் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையிலேயே காயமடைந்தவருக்கான சான்றிதழ்களை போலீசார் பெற்றுக்கொள்ள முடியும்.
கிரைம் மீட்டிங் நடத்தப்படாததால் இது குறித்து தெரியாமல் போலீசார் மேல் சிகிச்சை பெற்ற அரசு மருத்துவமனைகளுக்கு சான்றிதழ் பெறுவதற்காக அலையும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
தாலுகா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு சான்றிதழ் பெற மேல் சிகிச்சை பெற்ற அரசு மருத்துவமனையில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு போலீசார் ஆளாகியுள்ளனர்.
எனவே விருதுநகர் மாவட்ட போலீஸ் நிர்வாகம் 7 மாதங்களாக நடத்தாமல் உள்ள கிரைம் மீட்டிங்’ உடனடியாக நடத்தி புதிய நடைமுறைக்கான வழிகாட்டுதல்களை அனைத்து நிலை போலீசாருக்கும் தெரியப்படுத்துவற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
மேலும்
-
ஈரான் போரால் தோல்வி: ஒப்புக் கொண்டார் துணை அதிபர் வான்ஸ்
-
விண்வெளிக்கு கார் பானட்டை கொண்டு சென்று சோதித்த சென்னை ஸ்டார்ட் அப் நிறுவனம்
-
லஞ்ச பணத்துடன் சிக்கினார் உணவு பாதுகாப்பு அலுவலர்: ரூ.60 ஆயிரம் பறிமுதல்
-
ஞானேஷ்குமார் மீதான லஞ்ச வழக்கு: விசாரணைக்கு உத்தரவிட்டது கேரள அரசு
-
வன்தாராவில் உலகளாவிய வனவிலங்கு பாதுகாப்பு மாநாடு
-
ஆந்திராவிலிருந்து 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது