பெண் ஊழியருக்கு தொந்தரவு: வங்கி பொது மேலாளர் மீது வழக்கு

சிவகாசி: சிவகாசி நகர கூட்டுறவு வங்கி பெண் உதவியாளருக்கு தொந்தரவு கொடுத்த பொது மேலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

விருதுநகர் பேராளி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா தேவி 36. இவர் சிவகாசியில் நகர கூட்டுறவு வங்கியில் உதவியாளராக வேலை பார்க்கிறார். இவர் மீது வங்கி பொறுப்பு பொது மேலாளர் ஆறுமுகச்சாமி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியதோடு, என்னிடம் நீ அட்ஜஸ்ட் செய்து போனால் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கலாம் இல்லையெனில் தினமும் நீ பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என மிரட்டியுள்ளார். டவுன் போலீசார், ஆறுமுகசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement