வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி
சிவகாசி: அரசு வேலை வாங்கித் தருவதாக ஒரு பட்டாசு தொழிலாளிடம் ரூபாய் 10 லட்சம் மோசடி செய்த இரு பெண்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சிவகாசி அருகே ஈஞ்சார் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துராஜ் 56. பட்டாசு தொழிலாளியான இவரிடம் உடன் வேலை பார்த்த செல்வி என்பவர் வெற்றிலையூரணியை சேர்ந்த சைலா ஸ்ரீ, விஸ்வநத்தத்தைச் சேர்ந்த திருமலை செல்வி ஆகியோர் பலருக்கு அரசு வேலை வாங்கித் தந்துள்ளனர் உங்கள் மகனுக்கு வேலை வாங்கி கொடுப்பார்கள் எனக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து முத்துராஜ் அவர்களை தொடர்பு கொண்ட போது ரூ.10 லட்சம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளனர். இதை நம்பி ரூ 10 லட்சம் வாங்கி அவர்களிடம் கொடுத்துள்ளார். ஆனால் அரசு வேலை வாங்கித் தரவில்லை. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை
-
புதுச்சேரியில் தங்க கட்டி விற்பதாக கூறி ரூ. 2.5 கோடி மோசடி: 11 பேர் மீது வழக்கு
-
க.அலம்பளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி
-
ஏமப்பேர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ‘தினமலர் – பட்டம்’ இதழ் வழங்கல்
-
தேசிய ஜூனியர் தடகளப் போட்டி தமிழக அணி வெள்ளி பதக்கம்
-
மின்னணு வாழ்வு சான்றிதழை வீட்டிலிருந்தே பதிவு செய்யலாம்: அஞ்சலக கண்காணிப்பாளர் தகவல்
Advertisement
Advertisement