அமெரிக்க தேர்தலில் டிரம்ப் கட்சிக்கு பின்னடைவு; எலான் மஸ்க் கிண்டல்
வாஷிங்டன்: அமெரிக்க இடைக்கால தேர்தலில் இரு அவைகளிலும் அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சி பெரும்பான்மையை இழந்து விட்டது. செனட் சபையில் மொத்தம் உள்ள 100 தொகுதிகளில் 54 இடங்களில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியும், குடியரசு கட்சி 42 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி 224 இடங்களிலும், டிரம்பின் குடியரசு கட்சி 134 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் நம்பிக்கைக்குரிய குடியரசு கட்சி தலைவர்கள் பலர் தோல்வியை சந்தித்துள்ளனர்.
டிரம்ப்பின் கட்சி பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், அமெரிக்க தேர்தல் நிலவரம் குறித்து தொழிலதிபர் எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், "இந்த முறை தேர்தலில் தலையிடுவதற்காக நான் பயன்படுத்திய விண்வெளி லேசர்கள் வேலை செய்யவில்லை என்று நினைக்கிறேன்,' என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
2024ல் நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற போது, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய அமைப்பைப் பயன்படுத்தி ஓட்டு எண்ணிக்கையை முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.
சீமான் அமெரிக்காவுக்கு முயற்சி செய்யலாமே. அங்கு சென்று அமெரிக்கா வரலாறில் ஆபிரகாம் லிங்கன் உடன் எடுத்த புகைப்படத்தை காட்டி ஒட்டு சேகரிக்கலாம்.
தமிழ்நாட்டில் போதிய வரவேற்பு இல்லாததால் அமெரிக்காவில் அடுத்த தேர்தலில் அதிபர் வேட்பாளராக களமிறங்குகிறார் செந்தமிழன் சீமான்..
மற்றவர்களை ஏன் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்? அங்கும் திராவிஷ மாடல் அமைக்க திட்டங்கள் உண்டு என்று முன்னாள் முதல்வரும் அவரது துணை முதல்வரும் கொக்கரிப்பது கேட்கவில்லை?மேலும்
-
அரசு பஸ் மோதி பலியான வாலிபர் குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு
-
சேமிப்பு கிடங்கு பயன்பாட்டில் சென்னை முதலிடம்
-
கோவில் நிலத்தில் சாலை அமைக்க எதிர்ப்பு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
-
மிளகாய் பொடி துாவி ரூ.70 வழிப்பறி மூன்று மாநிலங்களில் ஆறு பேர் கைது
-
லிங்க மலையில் கிறிஸ்துவ ஜெப கூட்டம் பா.ஜ., நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
மாநில எறிபந்து போட்டி மாணவர்களுக்கு பாராட்டு