மாநில எறிபந்து போட்டி: மாணவர்களுக்கு பாராட்டு
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
விழுப்புரம் மாவட்ட அளவில் நடந்த எறிபந்து விளையாட்டு போட்டியில், 14 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவர்கள் கலந்து கொண்ட இரு அணிகளும், மாநில போட்டிக்கு தகுதி பெற்றன. அதனையொட்டி, பள்ளியில் நடந்த பாராட்டு நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.
உதவி தலைமை ஆசிரியர்கள் மஞ்சுநாதன், முருகவேல் முன்னிலை வகித்தனர். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று, மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது பெருமை அளிப்பதாக தலைமை ஆசிரியர் ஜெயசீலன் பேசினார்.
உடற்கல்வி பயிற்றுனர் சுரேஷ், கணினி ஆசிரியர் குரு ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி பேசினர். இதில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர்கள் ஜான்சன், வெங்கடேசன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
மேலும்
-
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் 1,008 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
-
170 ஆண்டு நீராவி ரயில் இன்ஜின் எழும்பூர் – ராயபுரம் வரை இயக்கம்: ரயில்வே பாரம்பரிய விழா
-
சைவம், வைணவம் பற்றி பேசிய தி.மு.க., ‘மாஜி’ மீதான வழக்கை வாபஸ் பெற்றார் பா.ஜ., கவுன்சிலர்
-
மகாதேவ் சூதாட்ட செயலி; மற்றொரு முக்கிய குற்றவாளி ரவி உப்பால் துபாயில் கைது
-
முதல்வர் வீடு அருகே பெண் குழந்தை மீட்பு
-
கீழ்ப்பாக்கத்தில் தீக்காய சிறப்பு வார்டு தொடக்கம்