ஏமப்பேர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ‘தினமலர் – பட்டம்’ இதழ் வழங்கல்
கள்ளக்குறிச்சி: ஏமப்பேர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு ‘தினமலர் – பட்டம்’ இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
‘தினமலர்’ நாளிதழ் சார்பில் கல்வி சேவைக்காக மாணவர்களுக்கான பட்டம் இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியாகிறது. இந்த சிறப்பிதழ், மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு, அறிவியல் கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அரசின் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களைத் தயார்படுத்தும் நோக்கில் விரிவான தகவல்கள் இடம்பெற்று வருகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு வினாடி வினா போட்டியும் நடத்தி ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி ஏமப்பேர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சி நகராட்சி சேர்மனும், நகர தி.மு.க., செயலாளருமான சுப்ராயலு, தலைமை தாங்கி ‘தினமலர் – பட்டம்’ இதழை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். தலைமை ஆசிரியர் பாலுசாமி முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் வாசுகுமார் வரவேற்றார். பள்ளி பட்டம் இதழ் பொறுப்பாசிரியர் கமலா, ஆசிரியை அமுதா, உடற்கல்வி ஆசிரியர் பழனிசாமி, தி.மு.க., நிர்வாகிகள் அப்துல்ரசாக், உமா வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
====== படு தோல்வி!
-
சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாக குழு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம்
-
மருத்துவமனை வளாத்தில் உருவான திடீர் குளம்
-
மக்கள் பயன்பாட்டுக்கு வந்த தானியங்கி துணிப்பை மெஷின்
-
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸில் தீபாவளி சிறப்பு இனிப்பு தொகுப்பு அறிமுகம்
-
வீட்டு உபயோக பொருட்களுக்கு ‘டார்லிங்’கில் சலுகைகள் அறிவிப்பு