ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸில் தீபாவளி சிறப்பு இனிப்பு தொகுப்பு அறிமுகம்

திருப்பூர்: தீபாவளி பண்டிகையையொட்டி, இனிப்புப் பிரியர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பல்வேறு வகையான பரிசுத் தொகுப்புகளை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆறு புதிய தொகுப்புகளில், கோல்டன் (GOLDEN) ரூ.520 விலையில் 500 கிராம் பாரம்பரிய நெய் இனிப்புகளுடனும், ஹெரிடேஜ் (HERITAGE) ரூ.590 விலையில் 500 கிராம் முந்திரி மற்றும் நெய் இனிப்புகளுடனும் கிடைக்கின்றன. ராயல் (ROYAL) தொகுப்பு ரூ.760 விலையில் 500 கிராம் முந்திரி இனிப்பு வகைகளைக் கொண்டுள்ளது.

இதேபோல், ஐவரி (IVORY) தொகுப்பு ரூ.575 விலையில் 660 கிராம் நெய் இனிப்புகள் மற்றும் கார வகைகளுடனும், ஸ்ப்ளெண்டர் (SPLENDOR) ரூ.660 விலையில் 685 கிராம் நெய் இனிப்புகள், முந்திரி லட்டுகள் மற்றும் கார வகைகளுடனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 500 கிராம் பாரம்பரிய மைசூர்பா கொண்ட மைசூர்பா தொகுப்பு ரூ.530-க்கும், 250 கிராம் முந்திரி இனிப்புகள் கொண்ட கேஷ்யூ கரஞ்ச் ரூ.550-க்கும் கிடைக்கின்றன.

மேலும், 500 கிராம் நெய் இனிப்புகள் கொண்ட ஸ்வீட் ட்ரீட் ரூ.620-க்கும், 610 கிராம் நெய் இனிப்புகள் கொண்ட ஸ்வீட் ஸ்ப்ளெண்டர் ரூ.650-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. பாரம்பரிய மைசூர்பா, பாதாம் அல்வா அடங்கிய 685 கிராம் எஸ்.கே.எஸ். சிக்னேச்சர் தொகுப்பு ரூ.666-க்கும், 500 கிராம் தேர்ந்தெடுக்கப்பட்ட முந்திரி இனிப்புகள் கொண்ட டெலிகசி ரூ.730-க்கும் கிடைக்கின்றன.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆறு தொகுப்புகள் உள்பட அனைத்து சிறப்பு இனிப்புத் தொகுப்புகளும், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் அனைத்து கிளைகளிலும் கிடைக்கும். பாரம்பரிய சுவையையும் தரத்தையும் தொடர்ந்து வழங்குவதில் மகிழ்ச்சி அடைவதாக, கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் வைஷ்ணவி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement