மக்கள் பயன்பாட்டுக்கு வந்த தானியங்கி துணிப்பை மெஷின்
திருப்பூர்: பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், திருப்பூரில் தானியங்கி துணிப்பை வழங்கும் 11 மெஷின்கள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
பூலுவபட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அருண்ராஜ் திட்டத்தைத் துவக்கி வைத்தார். பஸ் ஸ்டாண்ட், பூ மார்க்கெட், உழவர் சந்தை, வாரச்சந்தை உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் 11 இடங்களில் மெஷின்கள் நிறுவப்பட்டுள்ளன.
இதில், ஒன்பது மெஷின்கள் துணிப்பைகளை நேரடியாகப் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் நாணயம் அல்லது கியூஆர் குறியீடு, யுபிஐ மூலம் ரூ.10 செலுத்தி துணிப்பையைப் பெற்றுக்கொள்ளலாம்.
மீதமுள்ள இரண்டு மெஷின்கள் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சிக்காகச் சேகரிக்கும் வகையில் செயல்படுகின்றன. பயன்படுத்திய காலி பிளாஸ்டிக் பாட்டில்களை அவற்றில் செலுத்தினால், அதற்கான சன்மானமாக ஒரு துணிப்பை வழங்கப்படும். பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து, பாரம்பரிய துணிப்பை பயன்பாட்டை அதிகரிக்க பொதுமக்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்தி ஒத்துழைக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும்
-
‘டிஜிட்டல் ட்வின்’ கல்வி மாதிரி மையம்
-
‘மஹாதேவ்’ சூதாட்ட செயலியின் மற்றொரு நிர்வாகி துபாயில் கைது
-
‘112 – யை அழைத்தால் 3 நிமிடங்களில் மும்பை போலீஸ் வந்து விடுகின்றனர்’
-
நாமக்கல்லில் செஞ்சி சிறுமி? அங்கன்வாடி ஊழியர் கதறல்
-
சிலை கடத்தல் வழக்கில் தமிழக அரசு மீது சுப்ரீம் கோர் அதிருப்தி! மாயமான கோப்புகளை மீட்க எடுத்த நடவடிக்கை என்ன?
-
அருணாசலேஸ்வரர் கோவிலில் நெய்குட காணிக்கை செலுத்தும் மையம் திறப்பு