வீட்டு உபயோக பொருட்களுக்கு ‘டார்லிங்’கில் சலுகைகள் அறிவிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, ‘டார்லிங் ஹோம் அப்ளையன்ஸ்’ நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும், வீட்டு உபயோக பொருட்கள் சிறப்பு சலுகைகளில் விற்கப்பட்டு வருகின்றன.

இப்பண்டிகைக்கு, வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும், பல சலுகைகளை, ‘டார்லிங்’ நிறுவனம் அறிவித்துள்ளது. இது, வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது.

வீட்டுக்கு தேவையான, ‘ஏசி, டிவி, வாஷிங் மிஷின்’ மற்றும் மொபைல் போன்கள், பர்னிச்சர் உட்பட பல பொருட்களுக்கு, 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு 50,000 ரூபாய் வரை ‘கேஷ்பேக்’ எனும், குறிப்பிட்ட அளவில் பணம் திரும்ப பெறும் சேவையும் வழங்கப்படுகிறது.

‘ரிக்ளைனர், ஏர்ப்ரையர், ட்ராலி ஸ்மார்ட் வாட், மிக்ஸி’ ஆகிய பொருட்கள், ‘காம்போ’ பரிசுகளாக குறைந்த விலையில் விற்கப்பட்டு வருகின்றன.

தவிர, பழையதை கொடுத்து புதிய பொருட்கள் வாங்க விரும்புவோருக்கும், 10,000 ரூபாய் வரை ‘எக்ஸ்சேஞ்ச் ஆபர்’ வழங்கப்படுகிறது.

குறிப்பாக, மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 20,000 ரூபாய் வரை பர்னிச்சர் கூப்பனும் உண்டு.

மேலும், ‘ஆப்பிள் 15, 16’ ஐபோன்கள் பழைய விலையிலேயே தரப்படுவதுடன், சாம்சங் மொபைல் போன்களுக்கும் 15,000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படும். இந்த சலுகைகள், அனைத்து கிளைகளிலும் வதாக, டார்லிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement